
Tamil Buddhism_Ambedkarism 💙☸️
53 subscribers
About Tamil Buddhism_Ambedkarism 💙☸️
"உங்கள் அன்பும் பரிவும் எனக்கு உண்டு என்று உறுதியளித்திருக்கிறீர்கள். அது தேவையற்றது. நான் வேறு வகையான உறுதியை வேண்டுகிறேன். ஒற்றுமை, நமது உரிமைகளுக்காக நிற்கும் உறுதி, நமது உரிமைகளுக்காக போராடுதல், நமது உரிமைகளை வென்றெடுக்கும் வரை திரும்பிப் பாராதிருத்தல் ஆகிய உறுதிகள். உங்கள் பணி செய்ய நீங்கள் உறுதிமொழி கொடுங்கள்.என் பங்கினைச் செய்ய நான் உறுதி கொடுக்கிறேன். நீதி நம் பக்கம் இருப்பதால் நமது போரில் தோல்வியடை வாய்ப்பில்லை. போராட்டமானது முற்றிலுமாக அகநிலை சார்ந்தது. அதில் பருப்பொருள் சார்போ, இழிவோ எதுவும் இல்லை. ஏனெனில், நமது போராட்டம் செல்வத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ அல்ல. இது விடுதலைக்கான போராட்டம். இந்து சமூக அமைப்பினால் ஒடுக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நம் மனித மாண்பினை மீட்பதற்கான போராட்டம். இந்த அரசியல் போராட்டத்தில் இந்துக்கள் வெற்றி பெற்றும், நாம் தோல்வியடைந்தால், ஒடுக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும் தொடரும். கற்பி! கிளர்ச்சிசெய்! ஒன்று திரட்டு! உன்னிலே பற்றுக்கொள்! நம்பிக்கை தளராதே! என்பதுதான் உங்களுக்கு எனது கடைசி அறிவுரை வார்த்தைகள்! நீங்கள் என்னுடனேயே இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன். -புரட்சியாளர்.பாபாசாகேப்.அம்பேத்கர் (தொகுதி:37, பக்.349-350) பாபாசாகேப். டாக்டர். அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை நிகழ்காலத்தில் பயன்படுத்தி சமூகத்தில் நிலவும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அம்பேத்கரியம் பயில்வோம்! சமத்துவம் வெல்வோம்! 📚✒️💙 "இந்தியாவில் பௌத்தத்தை மீட்டெடுக்க என் மக்கள் எவ்வித தியாகத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள்"-டாக்டர். அம்பேத்கர் பண்டிதர்.அயோத்திதாசர் வழியில் தமிழ் பௌத்தம் மீட்போம்! 🧡☸️ சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவமான இந்தியாவை உருவாக்குவோம்! #ஜெய்பீம் 💙📚✒️ #நமோபுத்தா 🧡☸️
Similar Channels
Swipe to see more