
ALP Astrology
February 2, 2025 at 12:41 PM
இனிய பிறந்தநாள் வணக்கங்கள் ஐயா
வாழ்த்தி எழுதிட வண்ணமை வசப்படவில்லை
தமிழ்த்தாயின் மைந்தனே
காவியத்து நாயகனே!
காலமெல்லாம் வாழ்த்துகின்றோம்! ஆசிரியரின் வரைவிலக்கணம் பெயரிலேயே கொண்டு பெயர் சூட்டிய பெற்றோருக்கு பெருமையும் சேர்த்து வல்லமைக்கு ஒரு தூணாய்
வடிப்பதற்கு ஒரு எழுத்தாணியாய் வாழ்வோருக்கு ஓர்
வழிகாட்டியாய்
ஒளிவிளக்கேந்திய கோபுரமாய் பனித்துளியில் கடைந்தெடுத்த வெண்ணிற இதயம் கொண்டவனாய் வாழ்வின் பொருள் சொல்லி, வாழ்வதற்கும் பொருள் சொல்லி, பல்துறை வித்தகனாய் பரிபூரண இறையருள் பெற்றவனாய்
சாஸ்திர கலையாம் ஜோதிடத்தில் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தி நவீன மென்பொருளை உருவாக்கி ALP என்ற விருட்சத்தை உருவாக்கி, ஆலமரமாய் நிற்கும் அற்புத
ஜோதிடக்கலையை விழும் விழுதுகளில் இருந்து எழும் மரங்களாய் புதுப்புது மாணக்கர்களாய் எழுப்பி நிற்கும் வித்தகனாய் எங்கள் இதயங் கவர்ந்த ஆசானாய்
ஜோதிட உலகின் புரட்சி நாயகனாய்
குரு கடாட்சம் பூரணமாய் பெற்றவனாய் வாழ்க்கையின் சூத்திரத்தை வசப்படுத்தி தந்தவனாய் நிற்கும்
உமது பேரும், புகழும் உலகம் அறியட்டும்
இனிமையும் புதுமையும் வரமாகட்டும்
ஜெயம் அனைத்தும் ஜெயமாகட்டும்.
🙏
❤️
🎂
🎉
🙇♀️
36