NTK IT WING
NTK IT WING
February 13, 2025 at 01:11 AM
மக்களிடம் செல்! மக்களுடன் வாழு! மக்களிடம் கற்றுக்கொள்! மக்களுக்கு சேவையாற்று என்றார் அறிஞர் அண்ணா. அரசியலில் ஆடம்பரமும், பட்டோபமும்கூடாது என்றும் அறிவுறுத்தினார் அந்தப் பெருந்தகை. ஆனால், அண்ணாவின் வழித்தோன்றல்களே இன்றைக்கு அரசியலை ஆடம்பரமானதாக்கி, கட்சிகளை நிறுவனமயமாக்கிவிட்டார்கள். அந்த அடிப்படையிலேயே, தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை. அதனையே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் வலியுறுத்தினார். அந்த நடவடிக்கைகளை, ‘பணக்கொழுப்பு’ என மொத்தமாகத்தான் வர்ணித்தார். அந்த விமர்சனம் பல நூறு கோடிகளைக் கொட்டி, தேர்தல் நிபுணர்களின் ஆலோசனைக்கேற்ப இயங்கும் எல்லாக் கட்சிகளையும்தான் குறிக்கும். அப்படி பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு தவெக எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது? திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வது தொடர்பாக எழுந்த சிக்கல் குறித்து வாய்திறக்க மாட்டோமென பத்து நாட்களுக்கு மேல் மௌன விரதம் இருந்தவர்கள், இப்போது பொத்தாம் பொதுவான விமர்சனத்திற்குப் பொங்குவதேன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல; வாய்க்கொழுப்பும்கூட! பன்னாட்டு நிறுவனங்களிடமும், தனிப்பெரு முதலாளிகளிடமும்தான் கையேந்தக்கூடாதே ஒழிய, மக்களைப் பொருளாதரத்திற்காகச் சார்ந்திருப்பது ஒரு தவறும் இல்லை. தாங்கள் நம்புகிற அரசியல் வெல்ல வேண்டுமென எண்ணுகிற பொதுமக்கள், தாங்களே விரும்பி அளிக்கிற நன்கொடைதான் திரள்நிதி! தங்களால் களப்பங்களிப்பு செய்ய இயலாதபோது நிதிப்பங்களிப்பு தரும் சனநாயகப் பங்கேற்புதான் திரள்நிதி! திராவிட இயக்கங்கள் தொடங்கி, கம்யூனிச இயக்கங்கள்வரை இந்த முறையிலேயே அமைப்பைக் கட்டியிருக்கிறார்கள் என்பது அரசியல் அறிவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம். மக்கள் மன்றத்திலேயே பேசத் துணிவற்ற சகோதரர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குப் போய் என்னப் பேசப் போகிறார்? முதலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசட்டும். அதற்குத் துணிவு இருக்கிறதா? உளறிக் கொட்டுவதைப் பற்றி யார் பேசுவது? “சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் போராடினார் அம்பேத்கர்” என மாநாட்டு மேடையில் உளறிக் கொட்டிய சகோதரர் விஜய்யின் தொண்டர்களா? எழுதிக் கொடுத்ததைக்கூட பிழையின்றி பேசாதவர், சட்டமன்றத்திற்குப் போய் பேசி, அரசியல் மாற்றத்தை சாத்தியப்படுத்தப் போகிறாரா? வெட்கக்கேடு! தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி இயல்பானது. நாம் தமிழர் கட்சி வெற்றியை இன்னும் சுவைக்காது இருக்கலாம். ஆனால், உறுதியாக வரும் தேர்தலில் வெல்வோம்! அதேசமயம், எந்த சமரசமும் செய்ய மாட்டோம். ஊழலை ஒழிப்போமெனக் கூறிவிட்டு அதிமுகவோடு உள்ளிட்ட எந்தக் கட்சியோடும் பேச்சு வார்த்தை நடத்தவும் மாட்டோம். குடும்ப அரசியலை ஒழிப்போமெனவும் கூறிவிட்டு, காங்கிரசின் மீது ஒருதலைக் காதல் கொள்ளவும் மாட்டோம். நிறைவாக, தவெகவுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல! சாட்டை துரைமுருகன், மாநில கொள்கைபரப்புச் செயலாளர், நாம்தமிழர் கட்சி. https://x.com/_ITWingNTK/status/1889689222891888778?t=x0uTSnEHO3r-WzaZxZerIg&s=19
❤️ 👍 🙏 12

Comments