NTK IT WING
NTK IT WING
February 13, 2025 at 07:25 AM
புரட்சித் தமிழகம் கட்சி - பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், அதன் உண்மையான எழுச்சிக்கும் தமிழ்த்தேசிய அரசியலை வென்றெடுப்பது ஒன்றே தீர்வென்று முன்னின்று களமாடிவரும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பொதுத்தொண்டு புரிந்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்! https://x.com/Seeman4TN/status/1889919580707152126
❤️ 👍 🙏 11

Comments