NTK IT WING
NTK IT WING
February 13, 2025 at 09:36 AM
திரள்நிதியா? தனிநபர் நிதியா? ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பும் மக்கள் தங்களுக்கென்று ஒரு கட்சியை அல்லது இயக்கத்தைத் தொடங்கி நடத்தும் போது அதற்கான பொருளாதாரத்திற்குச் சார்ந்திருக்க வேண்டியது மக்களிடம் இருந்து பெறப்படும் திரள்நிதியையா? அல்லது தனி ஒரு முதலாளி நிதியையா? திரள்நிதியில் தத்துவமே தலைமை ஏற்கும்! தனிநபர் நிதியில் முதலாளிகளே தலைமை ஏற்பார்கள்! திரள்நிதியில் தொண்டர்கள் தான் முதலாளிகள்! தனிநபர் நிதியில் தொண்டர்கள் வெறும் கூலிகள் தான்! பணம் படைத்தவர்கள் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வலிமைபெற செய்யவும், அதிகாரத்தை நோக்கி நகரும் எளிய மக்களை ஏளனம் செய்து அரசியல் தளத்தில் இருந்து அப்புறப்படுத்தவும் தான் இங்கு மக்கள் தன்னெழுச்சியாக வழங்கும் திரள்நிதி விமர்சிக்கப்படுகிறது, கொச்சைப்படுத்தப்படுகிறது. இதில் நகைப்புக்குரியது என்னவென்றால், தன் வருமானத்தில் ஒரு பங்கை திரள்நிதியாகக் கட்சிக்கு கொடுத்து கட்சியின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் உழைக்கும் கூட்டத்தைக் கண்டு, கட்சி முதலாளியிடம் கூலி பெற்றுக்கொண்டு தன் வயிற்றுப்பிழைப்பை நடத்தும் ஒட்டுண்ணிகள் ஏளனம் செய்வது தான். தூற்றுங்கள் கூலிகளே... உங்கள் வயிறுகள் காய்ந்து விடுவதற்குள்! https://x.com/_ITWingNTK/status/1889967752640856388?s=08
❤️ 👍 🙏 14

Comments