Sri Ramanasramam
Sri Ramanasramam
February 7, 2025 at 12:52 PM
ஸ்ரீ ரமணா ஆசிரம இலவச மருந்தகம் – இருதய சிகிச்சையுடன் விரிவுபடுத்தப்பட்ட சேவைகள் துவக்கம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் அளவற்ற அருளால், ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் இலவச மருந்தகத்தில் இருதய சிகிச்சை சேவைகள் தொடங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். மேலும் இருதய நோய் மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்கு ஏதுவாக ரமணாச்ரம இலவச மருந்தகத்தில் அதிநவீன எக்கோ கார்டியோகிராம் இயந்திரம் பெறப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. அனுபவமிக்க இருதய நோய் நிபுணரான Dr. S.S. சீனிவாசன் அவர்கள் நோயாளிகளைப் பரிசோதித்து ஆலோசனைகள் மற்றும் சிகிச்சிகளை வாராந்திர சேவைகளாக அளிப்பதற்கு நமது இலவச மருந்தகத்தில் இணைந்துள்ளார்கள். இருதயப் பராமரிப்பு சிறப்பு சிகிச்சைகள் தேவையிருந்தும், அதைப் பெற வாய்ப்பில்லாதவர்களுக்கு இந்த சேவைகள் நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகின்றோம். இந்த புதிய எக்கோ கார்டியோகிராம் இயந்திரம் மற்றும் இருதய நோய் சிகிச்சை சேவை துவக்க நாளன்று பகவானின் ஆசிர்வாதத்தை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பௌதிக இதயத்தைப் பராமரிப்பது இன்றியமையாததாகும். அதேநேரத்தில் உண்மையான அமைதி மற்றும் பேரின்பத்தின் ஆதாரமான விளங்கும் ஆன்மிக இதயத்தை அறிய பகவானின் தெய்வீக சாந்நித்யம் நம்மை வழிநடத்தி வருகின்றது. அன்பர்களின் உடல் நலத்தை பராமரிப்பதற்கும் சாதகர்களின் ஆன்ம பலத்தினை உயர்த்துவதற்கும் ஸ்ரீ
🙏 ❤️ 👍 🌹 👆 🩷 47

Comments