Sri Ramanasramam
Sri Ramanasramam
February 11, 2025 at 08:13 AM
மகரிஷி – தொடர் புகழ்பெற்ற கதாசிரியர், தொலைக்காட்சி தொடர் இயக்குநர், பாம்பே சாணக்யா அவர்கள் இயக்கத்தில் பகவான் ரமண மகரிஷிகளின் சரிதம் “மகரிஷி” என்னும் தலைப்பில் 26 பகுதிகள் கொண்ட தொடர் டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்தத் தொடர் பகவானது வாழ்க்கை வரலாற்றினை, பகவானை நேரில் தரிசித்த தலைமுறை பெரியோர்கள் அதற்கு அடுத்த தலைமுறை மற்றும் இன்றைய இளைய சந்ததியினர் குடும்பங்களில் நடைபெறுவது போன்ற கதைக்களத்தில் உருவாக்கியுள்ளார். மேலும் சூரி நாகம்மா போன்ற பழம் பக்தர்கள் பாத்திரப்படைப்பு பகவானுடன் தங்கள் நினைவுகளை நேரில் வந்து விவரிப்பதுபோன்ற காட்சி அமைப்புகளும் இக்கால சந்ததியினர் பகவான்மீது எவ்வளவு பக்தியும் பிரேமையும் கொண்டுள்ளனர் என்பதையும் சிறப்பான திரைக்கதை அமைத்து காட்சிப் படுத்தி ஒளிப்பரப்பினை வாரவாரம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பாகத்திலும் உள்ள முக்கிய அம்சங்கள்: • பாகம் 1: இயக்குநரின் அறிமுக உரை, அமெரிக்கத் தம்பதிகள் இந்தியா வரும் தகவல், ரமண மகரிஷிகளின் சமத்துவம் • பாகம் 2: அமெரிக்கத் தம்பதிகள் இந்தியா வருதல், 'A Search in Secret India' என்ற புத்தகம் ரமண மகரிஷியை உலகுக்கு அறிமுகம் செய்தது. • பாகம் 3: சூரிநாகம்மா பகவானைச் சந்தித்ததை கடிதம் மூலம் விவரித்தல், ராஜயோகம், ஹடயோகம், மந்திர ஜபம் போன்ற எந்தவித முயற்சியுமின்றி பகவான் ரமண மகரிஷிகள் இயல்பாகவே ஆன்மிக நிலையின் உன்னத நிலையை மரணானுபவம் மூலமாக அடைந்தார். பால்பிரண்டன் காஞ்சிப் பெரியவரைச் சந்தித்தல். • பாகம் 4: பால் பிரண்டன் காஞ்சி பெரியவர் உரையாடல், ரமணரின் உபதேசங்கள், ஆன்மாவில் நிலைத்திருப்பது, ஆத்ம விசாரத்தின் விளக்கம். • பாகம் 5: நாகம்மா பகவான் சந்திப்பு, முக்தி பெற சமாதி நிலையை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற குஞ்சுசுவாமியின் கேள்விக்கு பகவான் பதிலுரைத்தல். • பாகம் 6: பகல்-இரவு, வெற்றி-தோல்வி போன்ற இரட்டைகள் எல்லாம் ஒன்றே என்ற விளக்கம், அனைவரும் ரமணாஸ்ரமம் செல்ல முடிவெடுத்தல். • பாகம் 7: திருவண்ணாமலை செல்வதில் தாமதம், ஆர்த்தியின் கணவர் கனவில் திருச்சுழியில் சிறு குழந்தை வடிவில் பகவான் தரிசனம் பெறுதல். • பாகம் 8: பால வேங்கடராமன் தந்தையை இழந்தது, பகவான் நாகம்மா உரையாடல், மரணானுபவம் - அருணை விஜய பயணம். • பாகம் 9: நாகம்மா - பகவான் அருணை விஜயத்தின் போது எழுதிய கடிதத்தினை விவரித்தல், குடும்பத்தினர் திருவண்ணாமலை செல்ல தயாராகுதல். • பாகம் 10: குடும்பத்தினர் ரமணாஸ்ரமம் வருதல் - ரமணாஸ்ரம தலைவர் ஆனந்த் ரமணன் அவர்களை சந்தித்து உரையாடுதல் – ரமணாஸ்ரமத்தின் செயல்பாடுகள் மற்றும் ரமணரின் உபதேசங்களை ஆச்ரம தலைவர் விரிவாக விவரித்தல் இந்தத் தொடர் ரமண மகரிஷியின் வாழ்க்கை, ஆன்மிகத் தன்மை மற்றும் போதனைகளின் ஆழத்தை உணர்த்துகிறது. மேலும், தனிப்பட்ட அன்பர்களின் அனுபவங்களையும் விவரிக்கின்றது. சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்தத்தொடரினை கீழ்க்கண்ட முகநூல் மற்றும் YouTube இணைப்பின் வாயிலாகவும் அன்பர்கள் தொடர்ந்து கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். பாகம் 10 இணைப்பு https://youtu.be/uluZDjWyOoM?feature=shared தொடரின் அனைத்து பாகங்களையும் கீழ்க்கண்ட இணைப்பின் வாயிலாக காணலாம். https://youtu.be/qnESADkgvuw?feature=shared
🙏 ❤️ 🌹 14

Comments