Tamil Nadu Congress

22.3K subscribers

Verified Channel
Tamil Nadu Congress
January 30, 2025 at 08:35 AM
கடந்த டிசம்பர் 17 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை மிகமிக இழிவாகப் பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை கூறியிருந்தார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக தேர்வு பெற்று, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக பொறுப்பேற்று, 60 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து, இந்தியாவில் உள்ள சாதி, மத, வேறுபாடுகளை கடந்து, இன்றைக்கும் பட்டியலின, சிறுபான்மையின, பின்தங்கிய மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பு கவசமாக, இன்றும் உலகமே போற்றுகின்ற வகையில் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார். அம்பேத்கர் அவர்களுக்கு பெருமை சேர்ப்பது அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் தானே தவிர, அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி அமைக்கிற எந்த நினைவுச் சின்னங்களும் அல்ல. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை (31.01.2025) வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துகிற வகையில் நாளை சென்னைக்கு வரும் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, ‘அமித்ஷாவே திரும்பிப் போ” என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். - தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA #gobackamitshah #அமித்ஷாவேதிரும்பிப்போ
👍 🙏 ❤️ 6

Comments