Sri Mahavishnu Info
January 21, 2025 at 11:54 AM
*"ஆக்கப் பொறுத்தவன் ஆரப் பொறுப்பதில்லை" என்பதற்கு சரியான விளக்கம் என்ன ?*
ஒரு செயலை, முழுமையாகச் செய்ய முயலும்போது, அச்செயல், 75%வரை நிறைவேறும்வரை பொறுமையாக இருந்தவனுக்கு, அச்செயல் முழுமைபெற இன்னும் 25% மட்டுமே தேவைப்படும்போது, பொறுமை இருப்பதில்லை ; மிகவும் அவசரப்பட்டு, அச்செயலை, வலுக்கட்டாயமாக முழுமை செய்ய முயல்கிறான். இதனால், அச்செயலும் முழுமைபெறாமல், பாதிக்கப்படுகிறது; அவனும் பாதிக்கப்படுகிறான்.
பொறுமையாகச் செய்ய வேண்டிய செயல்களை மேற்கொள்ளும்போது, அச்செயல்களின் பாதியில், பொறுமையைக் கைவிட்டுவிடக்கூடாது; அச்செயல், முழுமையாக நிறைவேறும்வரை பொறுமையைக் கடை பிடிக்க வேண்டும். அப்போதுதான், நிறைவான பலன்கிடைக்கும் என்பதே, இப்பழமொழி விளக்கும் கருத்தாகும்.
https://www.srimahavishnuinfo.org
🙏
❤️
👌
👍
😢
26