Sri Mahavishnu Info
February 2, 2025 at 07:56 AM
இன்று (02/02/2025), திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், "*ஈக்காட்டுத்தாங்கல் திருவூரல் உத்சவம்*" கொண்டாடப்படுகிறது.. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டருளி மயிலை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை(இரகுநாதபுரம்) விஜயம் செய்து அருள் பாலிப்பார். திரு ஊறல் உற்சவம், ஈக்காட்டுத்தாங்கல் உற்சவம், இரகுநாதபுர விஜயோத்ஸவம் என பல பெயர்களை கொண்டு பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. சைதாப்பேட்டை(இரகுநாதபுரம்) அருகிலுள்ள ஈக்காட்டுதாங்கல்(அடையாறு ஆற்றங்கரை அருகில்) என்ற இடத்தில் பெருமாளுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு வருடத்துக்கு ஒரு முறை பெருமாள் எழுந்தருள வேண்டும் என்பதால் இந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை இங்கு ஆறு அழகான நீரோடையாக ஓடி இருந்ததாள், குளிர்ந்த நீரின் நடுவே ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில்(மீன் பிடித்தல் அலங்காரம்) சேவை சாதித்து, பின் திருமஞ்சனமும் மற்றும் சைதாப்பேட்டை(இரகுநாதபுரம்),ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோயில் எழுந்தருளி தங்க கேடயத்தில் திருமாடவீதி புறப்பாடும் கண்டு வந்தாராம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் வெறும் திருமஞ்சனமும், சைதாப்பேட்டையில்(இரகுநாதபுரம்), திருப்பல்லக்கில் பண்ணா இன்றி திருக்குடைகளுடன் மாட வீதி புறப்பாடு கண்டு அருள்கிறார். ** HISTORY AND INSCRIPTIONS Triplicane Sri Parthasarathy temple has many properties all over the world. It was told that Ekkattuthangal was gifted to Perumal. A Mandapam with meta colour Sheet open mandapam is at Ekkattuthangal, called Thiruooral mandapam, is on the land gifted. The 1793 CE inscription on west side of the mandapam, records that this mandapam and the 36 kani land belongs to Thiruvallikeni, Sri Parthasarathy Temple. ( The inscription is recorded in Chennai Ma Nagar Kalvettukkal – சென்னை மாநகர கல்வெட்டுக்கள் – Published by Tamil Nadu Archaeological Department ) மண்டபமும் அதைச் சார்ந்த 36 காணி நிலமும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலைச் சார்ந்தது என்பதை இக்கல்வெட்டு குறிக்கிறது. The inscription reads as…. இந்த மண்டபமும் இதைச் சார்த்த ௩௰௬ காணி நிலமும் சென்னை திரு அல்லிக்கேணி ஸ்ரீ பாற்த்த ஸாரதி பெ[ரு) மா (னடிக] ளுடையது ௲௭௱௬௰௩ ளூ [.ராவிபிதா] ம்.. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அதிகாலை 3 மணியளவில் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு திருமயிலை ஸ்ரீ மாதவப்பெருமாள் கோயில், ஸ்ரீகேசவப்பெருமாள் கோவிலுக்கு வந்தடைவார். சித்திரை குளம் அருகே காத்திருந்து தமிழ்த்தலைவன் ஸ்ரீ பேயாழ்வார் ~ பெருமாளை மங்களாசாசனம் செய்து, எம்பெருமானை வரவேற்பார். "திருக்கண்டேன்* பொன்மேனி கண்டேன்,* திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்,* - செருக்கிளரும் பொன்ஆழி கண்டேன்* புரி சங்கம் கைக்கண்டேன்,* என்ஆழி வண்ணன்பால் இன்று" ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி கோஷ்டியுடன் புறப்பட்டு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலுக்குள் எழுந்தருளி, திருவமுது செய்வித்தபிறகு, சாற்றுமுறையுடன் ஆழ்வார் மங்களாசாசனம் பெற்று, பெருமாள் தம் பயணத்தை தொடர்வார்.. இதையடுத்து, தேனாம்பேட்டை, தி.நகர், மாம்பலம் வழியாக *மதுரா மேட்டுப்பாளையம், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம் வந்தடைந்து மண்டகப்படி கண்டருளி பின் ஈக்காட்டுதாங்கல் திருஊரல் மண்டபம் எழுந்தருள்வார்*. நண்பகல் 11.30 மணியளவில் பெருமாள் மண்டப திருமஞ்சனம் கண்டு அருள்கிறார். அங்கிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு சைதாப்பேட்டை(இரகுநாதபுரம்),ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோயில் கங்கை கொண்டான் மண்டபம் வந்தடைந்ததும், திருப்பல்லக்கில் பண்ணா இன்றி திருக்குடைகளுடன் மாட வீதி புறப்பாடு எழுந்தருளி, ரங்கபாஷ்யம் தெரு, கவரை தெரு, பெருமாள் கோவில் தெரு, இளையாழ்வார் கோவில் தெரு, வழியாக பல மண்டகப்படிகல் கண்டு அருளியபடி, ஸ்ரீ பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயிலுக்குள் ஸ்ரீஆண்டாள் சந்நிதியில் எழுந்தருளி சேவை சாதிப்பர்.. பின் சிறுது நேரம் இளைப்பாறி,மரியாதைகளை பெற்று, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் மாலை 7 மணியளவில் பிரியாவிடை பெற்று தன் ஆஸ்தானமான திருவல்லிக்கேணி சென்றடைவார்..
🙏 💩 😢 🙂 16

Comments