MYV3ADS COIMBATORE
January 23, 2025 at 04:15 AM
பொது அறிவிப்பு :
எமது கட்சிக்காரர் கோவை மாவட்டம், வெள்ளகிணறு. ஜி.என்.மில்ஸ், மான்செஸ்டர் காட்டன் சிட்டி, என்ற முகவரியில் வசித்து வரும் திரு.மருதாச்சலம் அவர்களின் மகன் திரு.M.சக்தி ஆனந்தன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கொடுக்கப்படும் பொது அறிவிப்பு: எமது கட்சிக்காரர் M/s MYV3 ADS என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பங்குதாரரும் ஆவார். மேற்படி நிறுவனங்களின் மீது அண்மை காலமாக காவல்துறையினர் பதிவு செய்துள்ள வழக்குகளை உரிய நீதிமன்றங்களில் சட்டப்படி எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் மேற்படி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல்வேறு நபர்கள் சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேற்படி எமது கட்சிக்கராருக்கும் அவரின் நிறுவனத்திற்குமான (https://youtube.com/@myv3adsmdforum?si=E891KwutYdX4UuKr) Youtube Channel "MYV3 ADSMD FORUM" இயங்கி வருகிறது. இது தவிர்த்து வேறு எந்தவிதமான சமூக இந் ஊடக பக்கங்களும் நிறுவனத்திற்கோ, எமது கட்சிக்காரருக்கோ கிடையாது. மேற்படி நிறுவனத்தின் பெயர் மற்றும் LOGO வை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பல்வேறு நபர்கள் பதிவிடும்| பதிவுகளுக்கும், நிறுவனத்தின் மீதான வழக்குகளில் மாண்பமை தி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மாண்பமை குலைக்கின்ற வகையிலும் வெளியிடப்படும் செய்திகளுக்கும் எமது கட்சிக்காரருக்கும், நிறுவனத்தின் பிற பங்குதாரர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அவர்கள் வெளியிடும் கருத்துக்களைப் பொறுத்து நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம் என்றும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, எமது கட்சிக்காரரின் முன் அனுமதியின்றி வெளியிடப்படும் கருத்துக்களுக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் எமது கட்சிக்காரர் பொறுப்பாக மாட்டார் என்றும், அவ்வாறு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எமது கட்சிக்காரர் சார்பாக மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
👍
❤️
🙏
😂
😢
😮
94