Kalviseithi | கல்விச்செய்தி
January 31, 2025 at 05:26 AM
பிப்ரவரி 4 முதல் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஸ்லாஸ் தேர்வு
அரசுப் பள்ளியில் 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஸ்லாஸ் எனும் கற்றல் அடைவுத் தேர்வு, பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ஸ்லாஸ் எனும் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு 3, 5, 8-ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வு, கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும். வினாத்தாளில் 3-ம் வகுப்புக்கு 35 வினாக்கள், 5-ம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ம் வகுப்புக்கு 50 வினாக்கள் இடம்பெறும். இதற்கான மாதிரி வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் மூலமாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும்.
இதை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்த வேண்டும். மாதிரித் தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் ஜனவரி 13, 20, 27, 30-ம் தேதிகளில் வழங்கப்படும். வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
SLAS Exam 2025 – Pattern of Selection of Students
💥 அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 4,5,6 பிப்ரவரி 25 ல் SLAS தேர்வானது 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது.
💥 3 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு 20 மாணவர்களும் ( தமிழ் மீடியம் எனில் 20 மாணவர்களும், ஆங்கில வழி இருந்தால் தமிழ் வழி 10 + ஆங்கில வழி 10 மாணவர்களும்) தெரிவு செய்யப்படுவர்.
💥 8ஆம் வகுப்பில் 30 பேர் தேர்வு எழுதுவர்
💥 மாணவர்கள் தேர்வானது ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு EMIS ல் வரும். Absent இருந்தாலும் பதிலி EMISல் வரும்
💥 எனவே தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் EMISல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
💥தொடர்ந்து விடுப்பில் இருந்தாலோ, இடைநிற்றல் இருந்தாலோ Common Pool க்கு அனுப்பவும்
அனைவருக்கும் வணக்கம்
SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்
4.2.2025 - Tuesday -3 rd std
5.2.2025 - Wednesday -5th std
6.2.2025 - Thursday - 8th std
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்
தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்
ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல்
தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்
தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்
தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்
தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல்
தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும்
குறிப்பு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.நன்றி
😂
😮
2