Legal Lions
January 31, 2025 at 04:50 PM
*1996ல் எனக்குத் திருமணம். அது சாதி மறுப்புக் காதல் மணம்.*
அவர்கள் பெயர் பாரதி. பச்சையப்பன் கல்லூரியில் அவர் வரலாற்றுத்துறை பேராசிரியர். பாரதியின் வருகைக்குப் பிறகுதான் மறுபடியும் எனக்குக் குடும்பம் வந்தது. பொறுப்புகளும். தான்தோன்றித்தனமான வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு வந்தது. எங்களுக்குக் கீர்த்தி என்று ஒரு மகள். பொருளாதார ரீதியாக ஓரளவு நல்ல நிலை என்றாலும் *பணத்துக்காக எந்த வழக்கையும் நான் எடுத்து நடத்தியதில்லை.* ஏழைகளுக்காகவே அதிகம் வாதாடி இருக்கிறேன்.
இந்நிலையில் அப்போது நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், என்னையும் நீதிபதி ஆகச் சொன்னார். அதை ஏற்று *இருமுறை நீதிபதிக்காக விண்ணப்பித்தேன்.*
*‘இவர் தீவிரவாதிகளுக்கான வழக்குரைஞர்’ என்று சொல்லி அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எனக்கு போஸ்டிங் போட மறுத்தார்.*
2006ல் ‘வழக்கறிஞர் என்பது தொழில். யாருக்காகவும் யாரும் வாதாடலாம். இதைக் காரணம் காட்டி நீதிபதி பொறுப்பைக் கொடுக்காமல் இருக்க முடியாது’ என உச்ச நீதி மன்றம் சொல்லி என்னை நீதிபதியாக நியமித்தார்கள். நீதிபதியாக *நான் பணியிலிருந்த காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கியிருக்கிறேன்.* இந்தியாவிலேயே இவ்வளவு வழக்குகளுக்கு யாரும் தீர்ப்புச் சொன்னதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், ‘இந்திய நீதிமன்றங்களின் சச்சின் சந்துருதான்… அவரது ஸ்கோரை முறியடிக்க யாருமில்லை…’ என எழுதியிருக்கிறார்.
நான் அமர்ந்தால் எந்த வாய்தாவும் கிடையாது. தீர்ப்புதான். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட டிக்டேஷன் செய்வேன். ‘சந்துருவுக்கு மட்டும் வாரத்துக்கு 8 நாள்’ என வி.ஆர்.கிருஷ்ணய்யர் கிண்டல் அடிப்பார். நீதிபதிகளுக்குப் பாதுகாப்புக் காவலர் கொடுப்பது வழக்கம். எனக்கு அப்படி யாரும் வேண்டாம் என எழுதிக் கொடுத்தேன். மக்கள் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. வாகனம் கூட பயன்படுத்த மாட்டேன். பெரும்பாலும் பேருந்து, ரயில்தான்.
*பதவிக்கு வந்ததுமே என் சொத்து விவரங்களைச் சமர்ப்பித்தேன்.* பல மூத்தவர்கள் இதனால் கோபம் அடைந்தார்கள். கடைசியில் அனைவரும் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வந்தது. *மகள் கீர்த்தி பல் மருத்துவராக இருக்கிறார்.* ‘ஒருவேளை நான் வழக்கறிஞராகி சுமாராக இருந்தால்… ‘என்ன, சந்துரு மகளா இருந்துகொண்டு இப்படி சுமாரா இருக்க’ என்ற பேச்சு வரும். அதனால் வழக்கறிஞராக மாட்டேன்’ எனக் கீர்த்தி சொல்லி விட்டார். என் நிழலில் வாழாமல் அவர் தன் துறையில் முன்னேறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
*எனக்கு, என் மனைவிக்கு, மகளுக்கு எல்லாம் இந்த வாழ்க்கையைக் கொடுத்தது கல்விதான்.* எங்களுக்கு மட்டுமில்லை… என் சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் கூட நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருப்பது கல்விதான். நாம் மேற்கொள்ளும் பணியை எந்த அளவுக்கு உண்மையாக மக்கள் நலன் சார்ந்து செய்கிறோமோ அந்தளவுக்குச் சமூகத்தில் நமக்குப் பெயர் கிடைக்கும். என் வாழ்க்கை எனக்கு உணர்த்தும் பாடம் இதுதான்.
ஓய்வுக்குப் பிறகு இன்றும் தினமும் படிக்கிறேன். படித்த நூல்களை லாரியில் ஏற்றி மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைப்பேன். இப்போது நடைபெறும் வழக்குகள் சார்ந்து என் கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். அந்த வகையிலேயே சமீபத்தில் மிசாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என அவதூறு கிளம்பியபோது அதை மறுத்து ஆதாரங்களை வெளியிட்டேன். மனித உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் என்றும் குரல் கொடுப்பேன்!
- *_நீதிபதி சந்துரு_*
நன்றி: சக்கரம்.காம்
கூடுதலாக அவர் இந்தியமாணவர்சங்கத்தில் SFIயில் செயல்பட்டவர் இடதுசாரி எண்ணம் கொண்டவர்.
அனைத்திற்கும் அவர் முன்னேற்றத்திற்குக் காரணம் கல்வி. *ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு ஊரைத் தெரிந்து கொண்டேன், உலகைத் தெரிந்து கொண்டேன் கண் மணி* எனத் தத்துவம் பேசி திரியவில்லை.
நாம் கடந்த 100 வருடங்களாகக் கல்வியைப் புறம் தள்ளி வீழ்ந்தது போதும். வீழ்த்தியது போதும்.
*இனி அடுத்த தலைமுறையை ஏமாற்றாமல் கல்வி கற்க உதவுங்கள். பொன் மொழிகள். அனுப்புவதால் மட்டுமே சமுதாயம் வளராது.*
👍
❤️
😂
🙏
13