தோரணமலை ᴛʜᴏʀᴀɴᴀᴍᴀʟᴀɪ
தோரணமலை ᴛʜᴏʀᴀɴᴀᴍᴀʟᴀɪ
February 26, 2025 at 02:10 AM
நன்றாக நினைவிருக்கிறது ; மடத்தூர் திரு வைத்தியலிங்கம் தாத்தா அவர்கள் தந்த ஆலோசனை இது ; அடையாளத்திற்காக சுண்ணாம்பு வாங்கி கரைத்து தோரணமலையின் கிழக்கு பக்கமாக ஊற்றுவார்கள் ; இந்த வெள்ளை நிறம் தூரத்திலிருந்து பார்ப்போருக்கும் அதோ தோரணமலை என அடையாளம் காட்ட உதவும் ; பள்ளி பயிலும் 1970 களின் இறுதியில் இது போன்ற பணி செய்வோருக்கு குடிக்க தண்ணீர் எடுத்து தருவதும் , கடுங்காப்பி மற்றும் சோளப்பொறி போன்ற கிராமத்து பண்டங்களை எடுத்து தருவதும் நமது பணி ; 10 பைசாவை மாலையில் அப்பா ஊதியமாக தருவார் ; அடுத்த நாள் பால் ஐஸ் வாங்கி சாப்பிடலாம் !! இதோ 45 வருடங்கள் கடந்து விட்டது ; மேஸ்திரி திரு மாரி செல்வன் , பொறியாளர் செல்வா ஒருங்கிணைப்பில் மீண்டும் தோரணமலை வெள்ளை நிறத்தில் மிளிர்கிறது ; பழைய டவுசர் காலங்களும் மனதில் மங்காமல் ஒளிர்கிறது !
🙏 ❤️ 👍 💙 ♥️ 👌 👏 💚 😮 🦚 85

Comments