EasternNews7
EasternNews7
February 28, 2025 at 10:59 AM
பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர், அவற்றின் செல்லுபடியாகும் காலம் 2025.02.28 அன்று முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Image from EasternNews7: பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் கா...

Comments