
புரட்சிக் கலைஞர் தலைவர் கேப்டன்
February 16, 2025 at 04:40 AM
#சட்டம்ஒருஇருட்டறை.....
புரட்சிகலைஞர் தலைவர் #கேப்டன் கதாநாயகனாக நடிக்க....
புரட்சி இயக்குனர் திரு.எஸ்.ஏ.சி
இயக்க 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 14
ஆம் தேதி திரைக்கு வந்து,
பிரம்மாண்ட வெற்றி பெற்று,
தமிழ் திரையுலகையே
புரட்டி போட்ட திரைப்படம்.....
படம் வெளி வந்து நேற்றோடு
சரியாக 44 வருடம் ஆகிவிட்டது.....
சட்டம் ஒரு இருட்டறை
கேப்டனுக்கு முதல் படம் அல்ல.....
7 வது திரைப்படம்....
ஆனால்...இந்த திரைப்படம்தான் மிகப்பெரிய அளவில் ஒரு கதாநாயகனாக கேப்டனை மக்களிடத்தில் கொண்டு சென்றது....
இயக்குனர் எஸ்.ஏ.சிக்கு
இதுதான் முதல் படம்.....
முதலில் இத்திரைப்படத்தின்
கதையை எத்தனையோ நடிகர்களை
பார்த்து கூறியிருக்கிறார் எஸ்.ஏ.சி....
இந்த படம் வெளிவருவதற்கு முன்பு சண்டை காட்சிகள் என்றால்
ஜெய்சங்கர்தான்....
ஜேம்ஸ் பாண்ட் என்றே நடிகர் ஜெய்சங்கரை அனைவரும் அழைப்பார்கள்....
அவரிடம்தான் முதலில்
கதை சொல்ல
எஸ்.ஏ.சி போயிருக்கிறார்....
அறிமுக இயக்குனர் என்பதால்
அவர் மறுத்து விட்டார்...
அடுத்ததாக நடிகர் சிவக்குமாரை
சந்திக்க அவரும் மறுத்து விட்டார்.....
அதன் பிறகு அந்த கதையை வைத்துகொண்டு கதாநாயகன் கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்தார் எஸ்.ஏ.சி.....
அப்பொழுதுதான் திடீரென
ஒரு ஜாவா பைக்கில் கம்பீரமான இளைஞர் ஒருவர் சினிமா கம்பெனி ஒன்றில் வாய்ப்பு கேட்க உள்ளே சென்றதை கவனித்தார் எஸ் ஏ.சி....
அந்த கண்களில் ஏதோ ஒன்று
இருக்கிறது என்று பார்த்தவுடன்
புரிந்துகொண்டார்......
அந்த இளைஞரிடம் சென்று பேசும்பொழுது அவரின்
மதுரைக்கே உண்டான கம்பீரமான
பேச்சு பிடித்து போகவே அவரிடம்
கதையை கூறினார்.....
அந்த இளைஞர்தான் கேப்டன் விஜயகாந்த்.....
வடலூரான் கம்பைன்ஸ் தயாரிக்க..
படமும் வெளிவந்தது....
திரையில் கேப்டனின்
அதிரடி சண்டை காட்சிகளை பார்த்து
யாரு இந்த இளைஞன்...
நம்மை போலவே இருக்கிறார் என்று
ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்....
அதற்கு முன்பு வரை ஜெய்சங்கரின் சண்டை காட்சிகளை பிரமித்து பார்த்தவர்களுக்கு கேப்டனின்
சண்டை காட்சிகள் அதைவிட கவனம்
ஈர்த்தது ரசிகர்களிடம்.....
அதோடு இல்லாமல் மயிர்
கூச்செரியும் வசனங்களும் ரசிகர்களை
பெரிதாக ஈர்த்தது....
இதற்கு முன்பு கேப்டன் நடித்த எந்த
படங்களிலும் அவரின் முகத்தை
அவ்வளவு குளோசாக காட்டியிருக்க
மாட்டார்கள்......
சட்டம் ஒரு இருட்டறை
திரைப்படத்தில்தான் அதிகமாக குளோசப் காட்சிகள் வைத்தனர்....
அந்தளவிற்கு கேப்டனின் முகத்தையும்,
கண்களையும் எஸ்.ஏ.சி நம்பினார்....
அவரின் நம்பிக்கையும்
உண்மையானது....
கேப்டனின் கண்களை இன்றுவரை
ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
இந்த ஒரு படத்தின் வெற்றிதான்
கேப்டனை திரையுலகில் அடுத்த
கட்டத்திற்கு அழைத்து சென்றது....
17 படங்கள் உடனடியாக
தேடி வந்தது.....
அறிமுக இயக்குனரான எஸ்.ஏ.சியும் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார்.....
இந்த திரைப்படம் தான் கேப்டனுக்கும்,
இயக்குனர் எஸ்.ஏ.சிக்கும் திரைத்துறையில் மேலும் தொடரவும்,
சாதிக்கவும் உதவியது....
தலைவர் கேப்டனின் வெற்றி
படங்களை வரிசைபடுத்தினால்,
அதில் நிச்சயம்
சட்டம் ஒரு இருட்டறை இருக்கும்.....
பதிவு : அருண்.விருதை...
#sattamoruiruttarai

❤️
1