
TN B.T Teachers Group
February 15, 2025 at 12:41 PM
*வேலூரில் பறவைகள் காணலுடன் இயற்கை நடை*
(ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு 2025)
பிப்ரவரி 16, 2025
ஞாயிறு காலை 7:00 - 9:00
துத்திப்பட்டு ஏரி (பாகாயம் அருகே)
கிழக்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட வேலூர் மாவட்டத்தில் பறவைகளை நீர் நிலைகள், முட்புதற்காடுகள், புல்வெளிகள், மலைப்பகுதிகள், சிறு குன்றுகள், காடுகள் என பல்வேறு வாழ்விடங்களில் காணலாம்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1147 நீர்நிலைகள் உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இவை பெரும்பாலும் பாலாற்றின் வடிநிலத்தை சார்ந்தவை.
வாருங்கள் அதில் ஒன்றான பாகாயம் அருகே உள்ள துத்திப்பட்டு ஏரியில் வாழும் உள்ளூர் பறவைகள் மற்றும் மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் வலசை வந்துள்ள வெளிநாட்டு பறவைகளை நேரில் கண்டு நமது சூழல் குறித்து விரிவாக அறிந்து கொள்வோம்.
*முன்பதிவு செய்ய:*
https://bit.ly/Nature_Walk_98
முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கு நிகழ்வு குறித்த மேலும் தகவல்கள் பகிரப்படும்.
வேலூர் மற்றும் சுற்றுவட்டாரம் சார்ந்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 🌿
#சூழல்அறிவோம் #gbbc