TN B.T Teachers Group
TN B.T Teachers Group
February 18, 2025 at 02:29 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்.. Today's (18.02.2025) School Morning Prayer Activities.. திருக்குறள் : பால்: அறத்துப்பால் அதிகாரம். ... துறவு குறள் 346: யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் விளக்கம்: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். பொன்மொழி : 1) யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். 2) கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் ... கற்பதை மறப்பது பழமொழி : “The garden of knowledge should flourish.” "அறிவின் சோலை செழிக்க வேண்டும்.” பொது அறிவு : உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ? விடை : லெனின் முக்கியச் செய்திகள் : மாநிலச்செய்தி: சென்னையில் 174 சிவப்புநிற விரைவு பேருந்துகள் விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றம் : தமிழக அரசு தகவல் உள்நாட்டுச்செய்தி: இந்தியையோ, பிற மொழியையோ தமிழ்நாட்டின் மீது திணிக்கவில்லை :மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி உலகச்செய்தி: கைகளில் விலங்கு, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் வேதனை விளையாட்டுச்செய்தி: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 23ம் தேதி பாக்கிஸ்தானுடன் இந்திய அணி மோதல்: முழு பட்டியல் வெளியானது

Comments