
Vidya Vikaas - Empowered Education
February 2, 2025 at 06:13 AM
#vidyavikaasnews
9ம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்.
தமிழக அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்காக புதிதாக சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர் களின், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில், ஒன்பதாம் வகுப்பு படிக் கும் போதே, கூடுதல் திறமைகளை வளர்ப்பு தற்கான, சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய் யப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இணை யவழி சான்றிதழ் படிப்பை, பள்ளியில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தின் வாயிலாக, பள்ளி வேலைநேரம் முடிந்தபின், மாணவர் கள் படிப்பதற்கு வசதியாக இணையவழியில் நடத்த உள்ளது. இதில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
வணிக திறன்கள், மொழி மற்றும் தொடர்பு திறன், தகவல் தொழில்நுட்ப திறன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நுண்திறன்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், பாடம் சார்ந்த கல்வி, வாழ்க்கைக்கல்வி உள்ளிட்ட பாடங்களில், மாணவர்கள் பயிற்சி பெறலாம்.
இப்படிப்புகளை ஒருங்கிணைத்து வழங்கும் பொறுப்பை, மாணவர்கள் மீது அக்கறையுள்ள ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும். அவர் கள், ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர் களுக்கு, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஆர்த்தி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
https://www.dinamalar.com/news/tamil-nadu-news/certificate-courses-introduced-for-9th-grade-students-/3843478