
Infotech Registration
February 17, 2025 at 04:42 PM
உயர்வான வாய்ப்பு தரும் உணவு சார்ந்த படிப்புகள்!
கல்வியின் இலக்கு என்பது வேலை பெறுவது மட்டுமல்ல, சிந்தனையைத் தூண்டி, புதிய பரிமாணங்களை எட்டச் செய்யும் வலிமைமிக்க சிறகுதான் கல்வி. ஆனால் இன்று எந்தப் படிப்பைப் பற்றிப் பேசினாலும், ‘படித்தால் வேலை கிடைக்குமா?' என்ற கேள்வியில் இருந்துதான் தொடங்குகிறார்கள். பெற்றோர், மாணவர்கள் மட்டுமன்றி அரசின் மனோபாவமும் அப்படித்தான் இருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தி. சமீப காலங்களில் உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பை மனதில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன.
வேலை முக்கியம்தான். ஆனால் அதுமட்டுமே இலக்கல்ல. வேலை என்று சுருங்கி அதற்குள்ளிருக்கும் பெரு வாய்ப்புகளை நம் மாணவர்கள் இழந்துவிடுகிறார்கள். நான் பலரைப் பார்த்திருக்கிறேன். தங்கள் திறமையையும் வாய்ப்பையும் சரிவரப் புரிந்துகொள்ளும் மாணவர்கள், நிச்சயம் பெரிய இடத்திற்குச் செல்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு படிப்பைப் பற்றியே இந்த பதிவில் பார்ப்போம்.
உணவு எப்போதுமே மிகவும் சுவாரஸ்யமானது. உணவு சார்ந்த படிப்புகளும் அப்படித்தான். தமிழக மாணவர்கள் மத்தியில் உணவு சார்ந்த படிப்புகள் மேல் பெரிய ஈர்
