
Infotech Registration
February 17, 2025 at 05:11 PM
யுபிஎஸ்சி ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்!
மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் தேர்வுகளுக்கு சென்ற (பிப். 13) முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.
மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் இந்திய பொருளாதாரப் பணி (ஐஇஎஸ்) மற்றும் இந்திய புள்ளியியல் பணி (ஐஎஸ்எஸ்) துறைகளில் காலியாக உள்ள 47 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 4.
விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30(ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும்(மாற்றுத்திறனாளிகள் / பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை).
கூடுதல் தகவல்களுக்கு: https://upsc.gov.in/sites/default/files/Notif-IES-ISS-Exam-2025-English-120225.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://upsconline.gov.in/upsc/OTRP/
விண்ணப்பிக்க கடைசிநாள்: 04.03.2025
Union Public Service Commission UPSC, Has Released A Notification On Official Websit
