🔥Aayesha News 24×7
🔥Aayesha News 24×7
February 27, 2025 at 12:08 PM
*சூலூர் விமானப் படை பள்ளியில் ஆசிரியர், அலுவலகப் பணி* மார்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம் சூலூர் விமானப் படை பள்ளியில் காலி யாக உள்ள ஆசிரியர், அலுவலகப் பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மார்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானப் படை பள்ளியின் செயல் இயக்குநர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள அறிவியல், கணிதம், ஆங்கிலம், ஹிந்தி, விளையாட்டு, நூலக ஆசிரியர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதுநிலை அல் லது இளநிலைப் பட்டம் பெற்றவர்கள், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர் களுக்கு மாத ஊதியமாக ரூ.33 ஆயிரம், இஎஸ்ஐ, இபிஎஃப் சலுகைகள் வழங்கப் படும். அதேபோல, மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்புப் பயிற்றுநர் பணியிடத் துக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஸ்பெஷல் எஜூகேஷன் பட்டயம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இசை ஆசிரியர் பணிக்கு அரசு அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்ட யம், பட்டம் பெற்றவர்களும், மழலையர், பால்வாடி பிரிவு ஆசிரியர் பணிக்கு நர் சரி, மாண்டிசோரி, ப்ரீ பிரைமரி பட்ட யம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க லாம். இதைத் தவிர கணக்குப் பிரிவு உதவி யாளர்கள், அலுவலக கண்காணிப்பா ளர், கிளர்க் பணியிடங்களுக்கு பட்டதா ரிகளும், ஆய்வக உதவியாளர் பணியிடத் துக்கு பிளஸ் 2 படித்தவர்களும், உதவியா ளர் பணியிடத்துக்கு குறிப்பிடத்தக்க கல் வித் தகுதி தேவையில்லை என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 50 வயது வரையிலானவர்களும், நூலகர் பணிக்கு 25 முதல் 50 வயது வரை யிலானவர்களும் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு 21 முதல் 50 வயது வரையிலானவர்கள் விண்ணப் பிக்கலாம். அனைத்துப் பணியிடங்க ளுக்கு விண்ணப்பிப்பவர்களும் ஆங்கி லம், ஹிந்தி எழுத, படிக்க, பேசத்தெரிந்த வர்களாக இருக்க வேண்டும். விண்ணப் பதாரர்கள் எழுத்துத் தேர்வு, கற்பித்தல் பயிற்சி, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விவரக் குறிப்பை, சூலூர் காங்கேயம் பாளையத்தில் உள்ள விமானப் படை பள்ளிமுதல்வருக்கு மார்ச் 5-ஆம் தேதிக் குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இது தொடர்பான கூடு தல் விவரங்களுக்கு www.airforceschoolsulur.com என்ற இணையதளத்தில் முழு விவரம் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Comments