ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
January 31, 2025 at 01:48 PM
*பிப்ரவரி - மாத பலன் 2025 பற்றி காண்போம்.* 2025 வருடத்தின் பிப்ரவரி மாதம் பலன்களை பற்றி காண்போம். குரோதி வருடம் - பிப்ரவரி -2025 மாதத்தில் 3 பெயர்ச்சிகள் உள்ளன. 🎁 04-02-2025 (தை 22) *குரு வக்ர நிவர்த்தி* (ரிஷபத்தில்) 🎁 10-02-2025 (தை 28) *புதன் (அஸ்தங்கத்தோடு கும்பம் ராசிக்கு பெயர்ச்சி)* 🎁 12-02-2025 (தை 30) *சூரியன்* (கும்பம் ராசிக்கு பெயர்ச்சி) 🎁 23-02-2025 (மாசி 11) *சனி அஸ்தங்கம் ஆரம்பம்* (கும்பத்தில்) 🎁 24-02-2025 (மாசி 12) *செவ்வாய் வக்ர நிவர்த்தி* (மிதுனத்தில்) ஆகவே, ஜனவரி மாதம் 12 ராசி/லக்னகளுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை காண்போம். *மேஷம்* | ♈ உடல் அளவிலும், மனதளவிலும் இருந்த அழுத்தம் விலகப்பெறும். தேவையில்லாத மனச் சிந்தனையில் இருந்து விடுபடும் நிலை தரும். புதிய முயற்சிகள் வெற்றியுடன் நடைபெறும். தடைபட்ட முயற்சிகள் இச்சமயம் பளிதமாகும். பேச்சுவார்த்தைகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. சிலருக்கு இழந்த பொருட்கள், அல்லது வாகனங்கள் மீண்டும் அமையும் சூழல் தரும். வழிபாடு : தினசரி முருகன் வழிபாடு செய்து வர, எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படும் துணிச்சல் தரும். *ரிஷபம்* | ♉ பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை. பிறருக்கு உதவச் சென்று பாதிப்புக்குள் மாட்டிக் கொள்ளும் நிலையை தரும். உத்தியோக முயற்சி செய்பவர்களுக்கு இக்காலகட்டம் கைகூடும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுகள் தேவை. அஜீர்ண கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை தரக்கூடியதாக இருக்கும். தூக்கமின்மை தரக்கூடியதாக இருக்கும். வழிபாடு : தினந்தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்து வர, வரக்கூடிய கெடுதல்களில் இருந்து விலகிச் செல்லக்கூடிய நிலை தரும். *மிதுனம்* | ♊ தேவையில்லாத கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எரிச்சல் குணம் தரக்கூடியதாக இருக்கும். வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது. எந்த ஒரு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அலைச்சலும் ஆதாயமும் தரக்கூடியதாக இருக்கும். குடும்பத்துக்குள் சில கோபதாபங்கள் வந்து விலகும். நிதானத்துடன் செயல்படக்கூடிய காலமாகும். வழிபாடு : தினந்தோறும் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு வில்வம் வைத்து வழிபாடு செய்து வர, மனநிலையை சீர்படுத்தக்கூடிய நிலையை தரும். *கடகம்* | ♋ தூக்கமின்மை தடைபடும், தேவையில்லாத பழைய சிந்தனைகள் அடிக்கடி வரக்கூடியதாக இருக்கும். எதிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோக வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு இக்காலகட்டம் கைகூடும். தொழிலில் புதிய லாபகரமான மாற்றங்களும் தரும். மருத்துவ செலவு சற்று தரக்கூடியதாக இருக்கும். வழிபாடு : அம்பாள் ஆலயங்களில் பௌர்ணமி பூஜைகளின் கலந்து கொள்வது நல்லது, மனதில் உள்ள குழப்பு நிலை சீராக கூடிய வாய்ப்பினை தரும். *சிம்மம்* | ♌ மூக்கடைப்பு, தொண்டை, பல், கழுத்து போன்ற பகுதிகளில் வலிகள் தரக்கூடியதாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இனிப்பு சார்ந்த பலகாரங்களை இக்காலகட்டம் தவிர்ந்து கொள்வது நல்லது. மற்றவர்களிடம் பேச்சுவார்த்தைகளை குறைத்துக் கொள்வது நல்லது. அவ்வபோது உடல் சோர்வு தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தக்கூடிய காலமாக இருக்கும். வழிபாடு : தினசரி காலை சூரிய வழிபாடு செய்வது, உடலளவில் நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்கும். *கன்னி* | ♍ சிறு சிறு விஷயங்களில் கூட கோபம் காட்டக்கூடிய நிலை தரும். எதிலும் பொறுமை காத்து செயல்படுவது நல்லது. அமைதியுடன் காரியத்தை சாதகப்படுத்துவது இக்காலக்கடத்தில் நன்மை தரும். தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை குறைத்துக் கொள்வது நல்லது. மனைவிக்கு சற்று உடல் பாதைகள் தரக்கூடியதாக இருக்கும். தன வரவும், சற்று செலவும் தரக்கூடிய காலமாக இருக்கும். வழிபாடு : தினந்தோறும் லட்சுமி நாராயணன் வழிபாடு செய்து வர, தேவையில்லாத கோபத்திலிருந்து விடுபடும் நிலையினை தரக்கூடியதாக இருக்கும். *துலாம்* | ♎ எந்த காரியத்திலும், மந்தநிலை தரக்கூடியதாக இருக்கும். தூக்கமின்மையும், சோர்வும் அவ்வப்போது வரக்கூடியதாக இருக்கும். நீண்ட தூர பயணங்களில் செல்லும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. கடன்கள் நிவர்த்தி பெறக்கூடிய சூழல்கள் தரும். சிலருக்கு புதிய கடன் அமையக்கூடிய நிலையின் தரும். உத்யோகத்தில் சிலர் இடமாற்றங்களும் அமையும். வழிபாடு : திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்துவர, உத்யோகத்தில் இருக்கும் இடையூறுகள் விளக்கக் கூடியதாக இருக்கும். *விருச்சிகம்* | ♏ திடீர் பயணங்களும், சுப நிகழ்வுகளும் தரக்கூடியதாக இருக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. இடுப்பு, முழங்கால், பாதம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பிறருக்கு வாக்குறுதிகளை காலகட்டம் செய்ய வேண்டாம். கடன் சார்ந்த சிறு தொந்தரவுகள் இக்காலக்கட்டம் தரக்கூடியதாக இருக்கும். பழைய கடனடைய புதிய கடன் பெரும் நிலையும் சிலருக்கு தரக்கூடியதாக இருக்கும். வழிபாடு : பழனி முருகன் மனதார நினைத்து வழிபாடு செய்துவர, எதிலும் அவப்பெயர் இல்லாமல் பயணிக்கக் கூடிய சூழல்கள் தரும். *தனுசு* | ♐ இதுவரை இருந்த மன அழுத்தங்கள் குறையக்கூடும். தெளிவான சிந்தனைகள் மனதில் தோன்றும். தயக்கத்துடன் செய்த காரியங்களில் தற்சமயம் முழு ஈடுபாடுடன் செயல்படும் நிலையை தரும். மனதில் நினைத்த விஷயங்கள் இக்காலகட்டம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். தன வரவும், சுப காரியமும் அமையும் காலமாகவே இருக்கும். வழிபாடு : குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும், விநாயகர் வழிபாடும் தடைகளிலிருந்து மீண்டு வரக்கூடிய சூழலை அமைத்து தரும். *மகரம்* | ♑ புதிய வாய்ப்புகள் அமையக்கூடிய சூழல் தரும். அவ்வப்போது மனதளவில் சிறுசிறு மயக்கமும், ஐயரவும் வெளிப்படக்கூடியதாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தரக்கூடியதாக இருக்கும். உத்யோக முயற்சி கைகூடும். எதிர்பாராத பயணங்களும், வெளிநாடு செல்லும் நிலையும் தரும். அலைச்சலுடன் ஆதாயம் பெறக்கூடிய சூழல் தரக்கூடியதாக இருக்கும். வழிபாடு : சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷங்களில் கலந்து கொள்வது, மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் தரக்கூடியதாக அமையும். *கும்பம்* | ♒ மனதில் தேவையில்லாத குழப்பங்களும், கோபதாபங்களும் தரக்கூடியதாக இருக்கும். திடீர் மனதில் ஐயரவுகள் தரக்கூடியதாக இருக்கும். தேவையில்லாத சிந்தனைகள், குழப்ப நிலை போன்ற வேலை தரக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபடும் பொழுது கவனம் சிதறாமல் செயல்படுவது நல்லது. வாகனங்களை இயக்கும்போது கவனம் தேவை. வழிபாடு : சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, குழப்பத்திலிருந்து தெளிவும், பொறுமையும் தரக்கூடியதாக இருக்கும். *மீனம்* | ♓ மனதளவில் உள்ள அழுத்தங்கள் விளக்கப்பெறும். தேவையில்லாத மனக்கவலைகள் விலகும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் சற்று அழுத்தங்கள் இருக்கும், கடன் அடைபெறும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். திடீர் பயணமும், உத்யோக மாற்றமும், புதிய உத்யோக வாய்ப்பு அமையக்கூடிய நிலை தரும். வழிபாடு : தேய்பிறை சதுர்த்தி அல்லது வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு சிறப்புற்று செய்ய, தேவையில்லாத மனக்குழப்பம் விலகும். எதிரிகளின் நெருக்கடி குறையும். எனவே இது கோச்சார ரீதியான பொது பலன்கள் மட்டுமே... ஜனன ஜாதக ரீதியாக நடப்பு தசா புத்தி எவ்வாறாக உள்ளதோ... அதன்படி இப்பலனும் சேர்ந்து வெளிப்படும். நன்றி! *ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்* ஜோதிடர் : *பா.சதாசிவன்* B.Com D.A Contact No : *+91 63814 53432*
❤️ 🙏 6

Comments