
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 16, 2025 at 12:18 PM
*கடகம் - கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.*
தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக 34 நாட்கள் அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார்.
பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன.
ஆகவே, *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை கடகத்திற்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம்.
கடகத்திற்கு சனிபகவான் 7 மற்றும் 8-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 8-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் கடகத்திற்கு
தனாதிபதி சூரியன், அட்டமாதிபதி சனி உடன் இணைந்து, சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார்.
கடகத்திற்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து மன அழுத்தங்களும், கோபதாபங்களும் என பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார்.
கடகத்திற்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *6,9,11,7,8* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு கடக லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)*
கடக லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் மிக கடுமையான காலகட்டமாக இருக்கக்கூடும். ஜாதகர்களுக்கு குறுகிய (Short Period) காலத்தில் கெடு பலன்களை அதிகமாக வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார்.
உடல் அவஸ்தைகள், தொண்டை,வயிறு, பைல்ஸ் போன்ற உபாதைகள் தரக்கூடும். குளிர் பானங்கள் இக்காலகட்டத்தில் அருந்தாமல் இருப்பது நல்லது. எரிச்சல், கோபம் போன்ற குணத்தால் பிறர்களிடம் வாக்குவாதங்கள் தரக்கூடும். இக்காலகட்டம் பொறுமையை சோதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எதிலும் விரக்தி தன்மை, ஒரு கடனை அடைப்பதற்கு மற்றொரு கடன் தரும் நிலை தரும். சகோதர சகோதரிகளால் மனக்கசப்புகள் தரும். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து விலகும். மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பிறரது செயல்களால் மனவலி தரக்கூடியதாக இருக்கும். புத்திரர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதை குறைத்துக் கொள்வதன் நல்லது. நட்பு வட்டாரங்களால் சற்று பாதிப்புகளும், ஏமாற்றங்களும் தரும். சில சமயங்களில் அவ பேச்சுக்கள் வெளிப்படும். செய்யாத காரியத்திற்கு பழி சுமக்கும் நிலை தரும். யாருக்கும் ஜாமீன் போன்ற உத்திரவாதங்களை தர வேண்டாம். *(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக் கூடியது.)*
கடக லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - *உச்சம், வக்ரம்* பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் உடலில் உள்ள உபாதைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேன்மை பெறும். நீண்ட நாள் கஷ்டங்களுக்கு பிறகு நன்மைகள் தரக்கூடியதாக இருக்கும். புதிய உத்தியோக வாய்ப்பு எதிர்பார்ப்பவர்களுக்கு இக்காலகட்டம் பூர்த்தியாகும். நீண்ட நாள் தடைபட்ட திருமண வாய்ப்புகள் சட்டென முடிவுக்குள் வரும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன்கள் அமையக்கூடும். நீண்ட நாள் கிடப்பில் இருந்த சொத்துக்கள் இக்காலகட்டம் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இடமாற்றங்களும் இடப்பெயர்ச்சிகளும் இக்காலகட்டம் தர கூடும். பழைய கடன்கள் நிவர்த்தி பெறக்கூடிய சூழல் ஏற்படும். பெரியோர்களது நம் நட்பும், ஆசியும் கிடைக்கப்பெறும். மனநிலை சீராகும். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், அந்தஸ்களில் உள்ளவர்கள் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. சிலருக்கு இழந்த பொருட்களும், பணங்களும் இக்காலகட்டம் திரும்ப கிடைக்கப்பெறும்.
சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : இஷ்ட தெய்வங்களுக்கு காணிக்கை முடித்து வைப்பது, குலதெய்வ கோயில்களில் அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு செய்வது இக்காலகட்டத்தில் நன்மைகள் தரக்கூடியதாக இருக்கும்.
நன்றி !
வாழ்க வளமுடன் !!
*ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்*
காரைக்குடி.
ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A
Contact Number : *+91 63814 53432*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️
3