ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 17, 2025 at 02:51 PM
*சிம்மம் - கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.*
தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக 34 நாட்கள் அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார்.
பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன.
ஆகவே *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை சிம்மத்திற்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம்.
சிம்மத்திற்கு சனிபகவான் 6 மற்றும் 7-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 7-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் சிம்மத்திற்கு ராசி/லக்னாதிபதி சூரியன், களத்திரகாரகன் சனி உடன் இணைந்து சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார்.
சிம்மத்திற்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து மன உளைச்சலும், காரிய தடை போன்ற பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார்.
சிம்மத்திற்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *5,8,10,6,7* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு சிம்ம லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)*
சிம்ம லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் எதிர்பார்த்த நல்ல பலன்களை ஜாதகர்களுக்கு குறுகிய (Short Period) காலத்தில் வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார்.
நீண்ட நாள் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இக்காலகட்டம் புத்திர பாக்கியம் அமையக்கூடும். மன அழுத்தங்கள், மன பாரம் குறையும். முன்பை விட தற்போது சுறுசுறுப்புடன் செயல்படும் நிலை தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் புத்திரர்களுக்கு அமையக்கூடும். இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இக்காலகட்டம் அமையக்கூடும். தொழிலில் மாற்றங்கள் தரும். தொழிலால் வந்த கடன் நிவர்த்தி பெறும். எதிரிகளின் நெருக்கடிகள் விலகும். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் தற்சமயம் சேர்ந்து பயணிக்கும் நிலை தரும். நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு இக்காலகட்டம் சட்டென திருமணம் நிச்சயிக்கப்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிறு சிறு மருத்துவ செலவுகளும் தரக்கூடியதாக இருக்கும். அடிவயிறு, தலைவலி, முழங்கால் பகுதி போன்றவைகளில் பாதிப்புகள் தந்து விலகக் கூடியதாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. *(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடியது.)*
சிம்ம லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - *உச்சம், வக்ரம்* பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் சற்று கவனம் உள்ள காலகட்டமாக இருக்கும். மனதளவில் சற்று பாரங்கள் தரக்கூடியதாக இருக்கும். தனிமையில் இருப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களால் சிறு சிறு இடையூறுகள் தந்து விலகக் கூடியதாக இருக்கும். தொழிலில் மாற்றங்கள் தரக்கூடியதாக இருக்கும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்க பெறும். கடன்கள் இக்காலகட்டத்தில் கட்டுக்குள் அடங்கும் நிலை தரும். பிறருக்காக ஜாமீன் போன்ற உத்திரவாதங்களை தராமல் இருப்பது நல்லது. புத்திரர்களுக்காக செலவுகள் செய்யக்கூடிய காலமாக இருக்கும். எதிர்பாராத பயணங்களும் அலைச்சல்களும் தந்து ஆதாயம் பெறக்கூடும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் நிலை தரும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் பொறுமையுடன் செயல்படுத்துவது நல்லது. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. மன மகிழ்ச்சியும், சுப நிகழ்வுகளும் தரக்கூடிய
காலகட்டமாகவே இருக்கும்.
சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : தினந்தோறும் சூரிய உதயத்தன்று வழிபாடு செய்வது நல்லது. உங்களுடைய குலதெய்வ ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவது உகந்த பலனை தரும்.
*(இக்காலகட்டங்களில் வெளி ஸ்தலங்களில் பரிகாரங்களோ, வழிபாடுகளோ செய்தால் அதன் பலன்கள் தாமதமாக கிடைக்கப்பெறும்.)*
நன்றி !
வாழ்க வளமுடன் !!
*ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்*
காரைக்குடி.
ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A
Contact Number : *+916381453432*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️
🙏
5