ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 18, 2025 at 12:56 PM
*கன்னி - கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.* தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக 34 நாட்கள் அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார். பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன. ஆகவே *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை கன்னிக்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம். கன்னிக்கு சனிபகவான் 5 மற்றும் 6-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 6-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் கன்னிக்கு விரையாதிபதி சூரியன், பஞ்சமாதிபதி சனி உடன் இணைந்து சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார். கன்னிக்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து மனக்கலக்கம், ஆதங்கம், ஏமாற்றங்கள் போன்ற பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார். கன்னிக்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *4,7,9,5,6* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு கன்னி லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)* கன்னி லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் எதிர்பார்த்த நற்பலன்கள் ஜாதகர்களுக்கு குறுகிய (Short Period) காலத்தில் வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார். இதுவரை இருந்த மன பயம் முதலில் விலகும். உடலில் ஆரோக்கியம் மேன்மை பெறும். தெளிவும் தைரியமும் தரக்கூடியதாக இருக்கும். புதிய முயற்சிகள் கிடைக்கக்கூடும். தடைபட்ட காரியங்கள் இக்காலகட்டம் நிறைவேறும். கணவன் மனைவியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திருமணம் தாமதமானவர்களுக்கு இக்காலகட்டம் திடீரென வரன் அமையக்கூடும். திடீர் பயணங்கள் தரும். உத்யோகத்தில் இடமாற்றம். மனதில் கற்பனையாக நினைத்த எதிர்பார்ப்புகள் இக்காலகட்டத்தில் நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் கிடைக்க பெறும். இழுபறியில் உள்ள சொத்துக்கள் இக்காலகட்டம் கைக்கு கிடைக்க பெறும். நீண்ட நாள் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையக்கூடும். கடன் நெருக்கடிகள் குறையும். பழைய கடன்கள் முதலில் அடைபடும் வாய்ப்புகள் தரும். சிலருக்கு கடனிலிருந்து விடுபடும் நிலையும் தரும். எதிரிகள் நண்பராகும் வாய்ப்புகளும் நிகழும். மனதளவில் ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியும் தரக்கூடியதாக இருக்கும் *(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடியது.)* கன்னி லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - *உச்சம், வக்ரம்* பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு கவனம் செலுத்தக்கூடிய காலகட்டம். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. தாயாருக்கு சிறு சிறு உடல் பாதைகள் தந்து விலகக்கூடும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மனக்கசப்புகள் வந்து விலகும். விட்டுக்கொடுத்து செல்லும் நிலை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் இருக்காது. தந்தையிடையே சிறுசிறு கருத்து பேதங்கள் தரக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்துக்களில் கைக்கு கிடைக்க சற்று தாமதம் தரும். வாகனச் சேர்க்கை, பொருள் சேர்க்கை போன்றவற்றில் சுபச் செலவுகள் தரும். மனதில் அவ்வபோது பழைய நினைவுகள் வந்து செல்லக்கூடும். புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவது இக்காலகட்டத்தில் மன அழுத்தத்தை குறைக்கும். நட்பு வட்டாரங்களில் அனுசரித்து செல்வது நல்லது. நிதானத்துடன் பயணிப்பது பெரிதளவு பாதிப்புகளை தராமல் இருக்கும். சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : உங்களுடைய குலதெய்வ ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவது உகந்த பலனை தரும். மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு செய்வது, கோயில் கைங்கரியம் செய்வதும் கெடு பாதிப்புகளில் இருந்து தப்பிக்கும் நிலை தரும். (இக்காலகட்டங்களில் வெளி ஸ்தலங்களில் பரிகாரங்களோ, வழிபாடுகளோ செய்தால் அதன் பலன்கள் தாமதமாக கிடைக்கப்பெறும்.) நன்றி ! வாழ்க வளமுடன் !! *ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்* காரைக்குடி. ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A Contact Number : *+916381453432* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️ 🙏 2

Comments