
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 20, 2025 at 02:21 PM
*விருச்சிகம் - கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.*
தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக 34 நாட்கள் அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார்.
பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன.
ஆகவே *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை விருச்சிகத்திற்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம்.
விருச்சிகத்திற்கு சனிபகவான் 3 மற்றும் 4-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 4-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் விருச்சிகத்திற்கு கர்மாதிபதி சூரியன், சுகாதிபதி சனி உடன் இணைந்து, சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார்.
விருச்சிகத்திற்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து உடல் உபாதைகளும், மனக்கலக்கம் போன்ற பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார்.
விருச்சிகத்திற்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *2,5,7,3,4* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு விருச்சிக லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)*
விருச்சிக லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் மிக உன்னத நற்பலன்களை ஜாதகர்களுக்கு குறுகிய (Short Period) காலத்தில் வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார்.
பொருளாதார வரவு, பொருள் சேர்க்கை, வாகனச் சேர்க்கை, இடச் சேர்க்கை போன்ற சுபச் செலவுகளும் சுப வரவுகளும் தரக்கூடிய காலகட்டம். தடைபட்ட காரியங்கள் இக்காலகட்டம் தடையில்லாமல் நிவர்த்தி பெறும். பூர்வீக சொத்துக்கள் இக்காலகட்டம் கைக்கு கிடைக்க கூடியதாக இருக்கும். நீண்ட நாளாக திருமணத்தில் தடை உள்ளவர்களுக்கு இக்காலகட்டத்தில் திடீரென நிச்சயம் உறுதியாகவும். மறு திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இக்காலகட்டம் வரன் அமையும். இளைய சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் தரும். உத்தியோகத்தில் ப்ரமோஷன் போன்ற உயர் பொறுப்புகளும், சம்பள உயர்வுகளும் தரும். *(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடியது.)*
விருச்சிக லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - *உச்சம், வக்ரம்* பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் சற்று கெடு பலன்கள் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்புகள் வந்து விலகும். கணவன் மனைவிக்கு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வீண் தர்க்கங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. நட்பு வட்டாரங்களில் மனக்கசப்புகள் தரக்கூடும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. பொருள் இழப்பு, ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் தரும். வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. எந்த ஒரு காரியத்தையும் அவசரம் இல்லாமல் நிதானத்துடன் செயல்படுவதை இக்காலகட்டத்தில் பாதிப்புகள் தராமல் இருக்கும். நீண்ட நாள் இழுபறியில் இருந்த சொத்துக்கள் கைக்கு கிடைக்கப்பெறும். தொழிலில் இக்காலகட்டத்தில் அதிக முதலீடுகள் செலுத்த வேண்டாம். பழைய கடன்கள் தற்சமயம் அடைபடும் நிலையினை தரும்.
சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : உங்களுடைய குலதெய்வ ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவது உகந்த பலனை தரும். சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷங்களில் கலந்து கொள்வது மன நிறைவை தரக்கூடியதாக இருக்கும்.
நன்றி !
வாழ்க வளமுடன் !!
*ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்*
காரைக்குடி.
ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A
Contact Number : *+9163814 53432*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️
🙏
3