ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 21, 2025 at 01:05 PM
*தனுசு - கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.* தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக 34 நாட்கள் அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார். பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன. ஆகவே *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை தனுசுவிற்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம். தனுசுவிற்கு சனிபகவான் 2 மற்றும் 3-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 3-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் தனுசுவிற்கு பாக்யாதிபதி சூரியன், சனி உடன் இணைந்து, சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார். தனுசுவிற்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து மனதளவில் அழுத்தமும், பொருளாதார நெருக்கடியும் போன்ற பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார். தனுசுவிற்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *1,4,6,2,3* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு தனுசு லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)* தனுசு லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் மிக உன்னத நல்ல பலன்களை ஜாதகர்களுக்கு குறுகிய (Short Period) காலத்தில் வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார். உடல் ஆரோக்கியத்திலும், மன அழுத்தங்களிலும் மெல்ல மெல்ல தெளிவு தரக்கூடியதாக இருக்கும். முகப்பொலிவு, உடல் தேஜஸ், நேர்மறையான சிந்தனைகள் போன்றவை வெளிப்படும். நினைத்ததை இக்காலகட்டத்தில் செயல்படுத்தும் நிலை தரும். உத்தியோகத்தில் உள்ள இடையூறுகள் விலகப்பெறும். புதிய உத்யோக அமைப்பு தேடிவரும். நீண்ட நாள் இழுபறிகள் இருந்த சொத்துக்கள் இக்காலகட்டத்தில் கைக்கு கிடைக்கப்பெறும். வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிலை ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் அடங்கும். சிலருக்கு கடன் நிவர்த்தி பெரும் சூழ்நிலையும் உண்டு. எதிரிகளின் நெருக்கடி விலக ஆரம்பிக்கும். இளைய சகோதரர்களால் உதவிகள் உண்டு. அவர்களுக்கு இக்காலக்கடத்தில் நன்மைகள் செய்யும் நிலையை தரும். இக்காலகட்டத்தில் நீங்கள் சொல்லும் சொல்லுக்கு நிச்சயம் மரியாதையும், மதிப்பும் கிடைக்கக்கூடியதாக இருக்கும். *(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடியது.)* தனுசு லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - உச்சம், வக்ரம் பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் சற்று கவனம் உள்ள காலகட்டமாக இருக்கும். பேச்சுவார்த்தைகளில் யோசித்து செயல்படுவது நல்லது. யாரிடமும் அனாவசிய பேச்சுக்கள் வேண்டாம். கோப உணர்ச்சிகளை குறைத்து செயல்படுவது நல்லது. சிலருக்கு புதிய கடன் அமையும் நிலை தரும். எக்காரியத்திலும் சலிப்பு காட்ட வேண்டாம். வாகனங்களை கையாளும் பொழுது நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் அவ்வபோது சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து விலகும். இளைய சகோதர சகோதரிகளால் சிறு சிறு இடையூறுகள் தரும். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது அதனை *(ஆவண விஷயங்களில்)* சரி பார்த்துக் கொள்வது நல்லது. நட்பு வட்டாரங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நான் என்ற கர்வம் வேண்டாம். அதேபோல எந்த ஒரு காரியத்திலும் முன் எடுத்து செயல்படுத்துவதை குறைத்துக் கொள்வது இக்காலக்கட்டத்தில் நன்மை தரும். உத்யோகத்தில் பணியிடை மாற்றும் தரும். சிலருக்கு நீண்ட நாள் எதிர்பார்க்க உத்தியோக வாய்ப்பு இக்காலகட்டம் அமையக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். மனதளவில் மிகப்பெரிய அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கும். சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : உங்களுடைய குலதெய்வ ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவது உகந்த பலனை தரும். (இக்காலகட்டங்களில் வெளி ஸ்தலங்களில் பரிகாரங்களோ, வழிபாடுகளோ செய்தால் அதன் பலன்கள் தாமதமாக கிடைக்கப்பெறும்.) நன்றி ! வாழ்க வளமுடன் !! *ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்* காரைக்குடி. ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A Contact Number : *+9163814 53432* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️ 3

Comments