ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 22, 2025 at 03:00 AM
*மகரம்- கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.*
தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக 34 நாட்கள் அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார்.
பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன.
ஆகவே *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை மகரத்திற்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம்.
மகரத்திற்கு சனிபகவான் 1 மற்றும் 2-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 2-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் மகரத்திற்கு அட்டமாதிபதி சூரியன், சனி உடன் இணைந்து, சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார்.
மகரத்திற்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து உடல் சோர்வு, மனக்குழப்பம், தடை தாமதம் போன்ற பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார்.
மகரத்திற்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *12,3,5,1,2* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு மகர லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)*
மகர லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் மிக கடுமையான பலன்களை ஜாதகர்களுக்கு குறுகிய (Short Period) காலத்தில் வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார்.
எதிர்பாராத திடீர் விரையச் செலவுகள், வாகனச் செலவுகள் தரக்கூடியதாக இருக்கும். எதிர்பாராத நீண்ட தூர பயணம் தரும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இக்காலகட்டம் அதிகம் தரும். செய்யும் முயற்சிகள் தாமதமாகும். இக்காலகட்டத்தில் உத்யோகத்தை விடாமல் பயணிப்பது நல்லது. புதிய எதிர்பார்ப்பு ஏமாற்றம் தரக்கூடியதாக இருக்கும். மனதளவிலும், உடலளவிலும் சோர்வுகள் தரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சிறு மருத்துவ செலவுகள் தரக்கூடியதாக இருக்கும். உணவு கட்டுப்பாடு இக்காலகட்டத்தில் அவசியமானது. வயிறு வலி, ஒற்றைத் தலைவலி, உடல் உஷ்ணம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளை அதிகம் தரும். இக்காலகட்டம் அலட்சியத்துடன் காரியத்தை செயல்படுத்தும் நிலையை தரும். *(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடியது.)*
மகர லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - *உச்சம், வக்ரம்* பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் சற்று கவனம் உள்ள காலகட்டமாக இருக்கும். வீண் செலவுகளும், வீண் அலைச்சல்களும் தரக்கூடியதாக இருக்கும். ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய நிலை தரும். உடல் பலவீனத்தை தரக்கூடிய இக்காலகட்டமாக இருக்கும். இக்காலகட்டத்தில் உடற்பயிற்சிகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடினமான வேலைகளை பொறுமையுடன் இருந்து செயல்படுத்துவது நல்லது. வரவுக்கேற்ற செலவுகள் தரக்கூடியதாக இருக்கும். புதிய உத்யோக முயற்சியை தாமதப்படுத்திக் கொள்வது நல்லது. மனக்கலக்கம், குடும்பத்தில் மனக்கசப்பு போன்றவற்றை தரக்கூடிய காலகட்டம். யாரிடமும் கடிந்து கொள்ள வேண்டாம். இக்கால கட்டத்தில் சிறிய வாய்ப்பாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி கொள்வது நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும்.
சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : உங்களுடைய குலதெய்வ ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுவது உகந்த பலனை தரும். காலையில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதில் அஸ்தங்கத்தால் ஏற்படும் தொல்லைகள் குறையும்.
(இக்காலகட்டங்களில் வெளி ஸ்தலங்களில் பரிகாரங்களோ, வழிபாடுகளோ செய்தால் அதன் பலன்கள் தாமதமாக கிடைக்கப்பெறும்.)
நன்றி !
வாழ்க வளமுடன் !!
*ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்*
காரைக்குடி.
ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A
Contact Number : *+9163814 53432*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️
2