ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
February 23, 2025 at 02:57 AM
*மீனம் - கும்பத்தில் `சனி அஸ்தங்கம்` பலன் பற்றி காண்போம்.* தற்போது சனிபகவான் சூரியனுக்கு முன்பு அஸ்தங்க நிலை பெறப்போகிறார். சுமாராக 34 நாட்கள் அஸ்தங்க கதியில் மறைந்திருந்து பலன் தரப்போகிறார். பொதுவாக கிரகங்களின் அஸ்தங்கம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பலரும், ஆனால் கிரகத்தின் சிறிய மாறுபாட்டிலேயே பலவித முரண்பாடான பலன்கள் வெளிப்படுகின்றன. ஆகவே *ஆயுள் காரகன்* சனிபகவான் சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெறுவதால் எவ்வாறான பலன்களை மீனத்திற்கு வழங்கப் போகிறார் என்பதை காண்போம். மீனத்திற்கு சனிபகவான் 11 மற்றும் 12-ம் இடத்திற்கு சொந்தக்காரர். அவர் தற்சமயம் 12-ல் பயணித்துக் கொண்டு உள்ளார். ஆகையில் மீனத்திற்கு 6-ம் அதிபன் சூரியன், 12 அதிபதி சனி உடன் இணைந்து, சனியின் ஒளியினை அஸ்தங்க முறையில் மறைக்கப் போகிறார். மீனத்திற்கு சனி வக்ரம் நிவர்த்தியிலிருந்து எதைத் தொட்டாலும் விரையம், மனக்கலக்கம், குழப்ப சிந்தனை போன்ற பலவித இன்னல்களை தந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் இருக்கும் இடத்திலேயே அஸ்தங்க முறையில் மறைந்திருந்து பலன் தரப் போகிறார். மீனத்திற்கு சனி அஸ்தங்கம் பெற்று இயக்கக் கூடிய பாவகம் : *10,1,3,11,12* பாவகங்களை மறைந்திருந்து பலன் தரப்போகிறார். *(பாவக அமைப்பு மீன லக்னத்திற்கு மட்டும் அதிகளவு செயல்படுத்தும்.)* மீனம் லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் *சனி (அ)* என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு இந்த 34 நாட்கள் மிக கடுமையான கெடு பலன்களை ஜாதகர்களுக்கு குறுகிய (Short Period) காலத்தில் வழங்க கூடியவராக அமைய பெற்றிருப்பார். சிலர் தொழிலை விட்டு உத்யோகத்திற்கு செல்லும் நிலை தரும். எதிர்பாராத வீண் செலவுகள், வரவுக்கேற்ற செலவுகள் அதிகம் இருக்கும். உடல் சோர்வு, அசதி போன்றவை தரும். புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். எதிர்பார்த்த வரவுகளும் சற்று தாமதமாகவே கைக்கு கிடைக்க பெறும். சகோதர சகோதரிகளிடையே மனக்கலக்கங்கள் தரக்கூடியதாக இருக்கும். எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகவே நிகழக்கூடிய காலகட்டம். சிறிய சுபச் செலவு தரக்கூடிய காலகட்டம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சிறு மருத்துவ செலவுகளும் தரக்கூடியதாக இருக்கும். உடலில் சிறு காயங்கள் இருந்தால் அதால் அவஸ்தை தரக்கூடியதாக இருக்கும். வாகனங்களில் கையாளும் பொழுது கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை இக்காலகட்டத்தில் தவிர்த்துக் கொள்வது நல்லது. இக்காலகட்டம் *ஜென்மச்சனியின்* தாக்கம் தரக்கூடியதாக இருக்கும். *(இவைகள் ஜனன ஜாதகத்தில் சனி அஸ்தங்கம் பெற்றவர்களுக்கு கிடைக்கக்கூடியது.)* மீன லக்ன/ராசி அன்பர்களுக்கு ஜனன ஜாதகத்தில் சனி - *உச்சம், வக்ரம்* பெற்றிருந்தால் அவர்களுக்கு இக்காலகட்டம் நன்மையும் தீமையும் உள்ள காலகட்டமாக இருக்கும். சிலருக்கு தொழில் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் தொல்லை தந்த கடன் நிவர்த்தி பெறும். சிலருக்கு புதிய கடன் பெறும் நிலையும் தரும். எதிர்பாராத சுபச் செலவுகளும் தரக்கூடிய காலகட்டம். உடல் ஆரோக்கியத்தில் அவ்வபோது மந்த நிலை தரும். மூத்த சகோதரரால் சிறு சிறு இடையூறுகள் தரக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மனஸ்தாபங்கள் தரக்கூடியதாக இருக்கும். எதிலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பாராத பயணங்கள் தரக்கூடிய காலகட்டம். அயல் நாட்டில் பயணிப்பவர்கள் உள்நாட்டிற்கு பயணிக்கும் நிலை தரும். சிலருக்கு வேலை இழப்புகளும் தரும். இக்காலகட்டம் வெளிநாடு செல்லும் நண்பர்களுக்கு சிறு சிறு இடையூறுகள் தரக்கூடிய காலகட்டம். சனி அஸ்தங்கத்தில் வழிபடக்கூடிய ஸ்தலங்கள் என்றால் : உங்களது குலதெய்வத்திற்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபாடு செய்வது உகந்த பலன்களை தரும். மேலும் இஷ்ட தெய்வங்களை வழிபாடு செய்வதும் கெடு பலன்களில் இருந்து பாதுகாப்பு தரக்கூடியதாக இருக்கும். நன்றி ! வாழ்க வளமுடன் !! *ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்* காரைக்குடி. ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A Contact Number : *+9163814 53432* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️ 1

Comments