ஶ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்
March 1, 2025 at 01:40 PM
*பங்குனி மாதத்தில் - 6 கிரக சேர்க்கை - வலிமை பெறும் ராகுபகவான்....*
2025 - பங்குனி மாதம் கால புருஷனுக்கு விரைய, மோட்ச, போக வீடான மீனத்தில் 6 கிரகத்திற்கு நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு *2019* - மார்கழி மாதத்தில் 6 கிரகச் சேர்க்கை நடைபெற்றது. (அக்காலகட்டத்தில் வலுப்பெற்ற *கேதுபகவான்* கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரால் உலகத்தை ஆட்டி படைத்தார்.)
அதேபோல, வருகின்ற பங்குனி மாதம் காலபுருஷனுக்கு 12ம் வீட்டில் 6 கிரகச் சேர்க்கை நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் வலிமையை பெறப்போவது *ராகுபகவான்*
இணைவு பெறக்கூடிய கிரகங்கள் :
*சூரியன்*
*புதன் (வக்ரம்)*
*சுக்ரன் (வக்ரம்)*
*சனி*
*நெப்டியூன்*
*ராகு*
ஆகிய கிரகங்கள் 12-ல் இணைய உள்ளன.
நெப்டியூனின் ஆதிக்கம் படி 12-ம் இடம் ஆட்சி பலம் உள்ள இடம். (இவரின் நிலையால் தான் குருவின் பலன்கள் இக்காலகட்டத்தில் யாருக்கும் பிரதிபலிக்கவில்லை.)
எனவே ராகுவிற்கு உன்னத வலிமையினை பெற்று, ராகு காலபுருஷனுக்கு 11ம் கும்ப வீட்டிற்கு பெயர்ச்சியினையும் பெறப்போகிறார்.
இது நாள் வரை மீனத்தில் இருந்து ராகு பொறுமை காத்து இழந்த பலத்தை மீண்டும் சூரியன் புதன் சுக்கிரன் சனி நெப்டியூன் ஐவரின் பலத்தைப் பெற்று மீண்டும் வலிமையினை பெறுகிறார்.
(இக்காலகட்டத்தில் இஸ்லாமிய நாடுகளின் யுத்த களமாக இருந்தாலும், பொருளாதார வளமாக இருந்தாலும் இவர்களின் கை மேல் ஓங்கும் நிலை ஏற்படும்.)
(கேது வலிமையிலிருந்து சிம்மத்திற்கு செல்வதால் உலக அளவிற்கு பலவித மாற்றங்களை தரக்கூடியதாக இருக்கும்.)
ராகுவால் தோஷம் பெற்ற ஐந்து கிரகங்கள் நிவர்த்தி பெரும் மாதங்களின் எண்ணிக்கைகள் :
*சூரியன் 3 மாதம்,*
*புதன் 1 மாதம்,*
*சுக்ரன் 2 மாதம்,*
*சனி 6 மாதம்,*
*நெப்டியூன் 12 மாதம், (அதாவது குரு மிதுனத்தில் இருக்கும் கால அளவு வரை.)*
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாக கிரகப் பெயர்ச்சியின்படி உள்ள ஆண்டு. சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு/கேது பெயர்ச்சி உள்ள ஆண்டு. ஆனால் கிரக பெயர்ச்சிகளின் மாறுதல்களை பலரால் உணர இயலாமல் இருக்கும்.
இந்த 3 - கிரக பெயர்ச்சிகளையும் உணரக்கூடிய ஜாதகர்கள் ராகு தசை நடப்பில் உள்ளவர்களுக்கும், ராகு நட்சத்திரமாக அமைய பெற்றவர்களுக்கும் உணரக்கூடியதாக இருக்கும்.
வலிமை பெற்ற ராகு வெளிப்படுத்தக்கூடிய கெடுபலன்கள் என்னவென்றால், உலகத்திற்கு ஆணவத்தாலும், அதிகாரத்தாலும், பணம், பொன் பொருள் ஆதிக்கத்தாலும், அலட்சியத்தாலும், இயற்கை பேரிடராலும், சுகபோக ஆசையிலாலும், பித்துருக்களின் சாபத்தாலும் கும்பத்தில் பயணிக்கும் ராகு ஒன்றரை ஆண்டு காலங்கள் உலகை மாற்றி அமைக்கும் பலனை வெளிப்படுத்தும்.
இந்தப் பங்குனி மாதத்தில் கெடு பலன்கள் தரக்கூடிய திசைகள் என்னவென்றால்,
லக்னத்திற்கு, *சூரிய திசை,*
*புதன் திசை,*
*சுக்ர திசை,*
*சனி திசை,*
*குரு திசை* நடப்பவர்களுக்கு இந்த மாதத்தில் இடையூறுகளும், கெடு பலன்களும் தரக் கூடியதாக இருக்கும். (இவை திசை நடத்துபவர்கள் வலுவினைப் பொறுத்து கெடுபலனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.)
இவைகளில் *சுக்ர திசை / குரு திசை* நடப்பவர்கள் விலங்குகளாலும் அச்சுறுத்தல்கள் தரக்கூடியதாக இருக்கும்.
ஜனன ஜாதகத்தில் ராகு வலிமை பெற்றுள்ளவர்களுக்கு இந்த ஒன்றரை ஆண்டு காலம் கும்பத்தில் உள்ள ராகு, எதிர்பாராத ராஜயோகங்களை தரக்கூடியதாக இருக்கும்.
ஜனன ஜாதகத்தில் வலிமை குறைந்த ராகு உள்ளவர்களுக்கு இந்த ஒன்றரை ஆண்டு காலம் கும்பத்தில் உள்ளதாக எதிர்பாராத சரிவுகளும், இடையூறுகளும் தரக்கூடியதாக இருக்கும்.
விரைவில் ஒவ்வொரு கிரக பெயர்ச்சிகளுக்கான பலன்கள் பதிவு செய்யப்படும். ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து ஜோதிட குழுவில் இணைந்து பயன்படலாம்.
நன்றி !
வாழ்க வளமுடன் !!
*ஸ்ரீ குமராயி ஆன்லைன் ஜோதிடம்*
காரைக்குடி.
ஜோதிடர் : *Dr.பா.சதாசிவன்* B.Com D.A
Contact Number : *+91 63814 53432*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
❤️
🙏
4