தமிழக வெற்றிக்கழகம்
February 2, 2025 at 09:18 AM
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.
மேலும், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நம் தலைமை நிலையச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஐம்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வெற்றி நிச்சயம்!
❤️
4