SwamigThirunavukkarasar
                                
                            
                            
                    
                                
                                
                                February 9, 2025 at 05:21 AM
                               
                            
                        
                            கோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா?
கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா? காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை. திரிகரணசுத்தி என்றால் என்ன? மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது.  எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள்.