Sharada Peetham - Tamil Nadu Updates
February 26, 2025 at 03:55 PM
நாகே₃ந்த்₃ரஹாராய த்ரிலோசனாய
ப₄ஸ்மாங்க₃ராகா₃ய மஹேஶ்வராய ।
நித்யாய ஶுத்₃தா₄ய தி₃க₃ம்ப₃ராய
தஸ்மை நகாராய நம꞉ ஶிவாய ॥
நாகத்தை மாலையாக அணித்திருப்பவரும், விசேசமாக மூன்று கண்களுடையவரும், உடல் முழுவதும் திருநீறு அணிந்திருப்பவரும், மஹா தேவரும், முதலும் முடிவும் இன்றி என்றும் உள்ளவரும், எந்த வித களங்கமுமற்று, இட அளவரையற்று எங்கும் நிறைத்திருப்பவருமான, (சிவ பஞ்சாக்ஷரத்தின் முதலெழுத்தான) நகார வடிவிலான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
🙏
❤️
12