Vck Social Media
Vck Social Media
February 25, 2025 at 04:28 PM
*தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்க.!* 2026 ஆம் ஆண்டோடு இப்போதுள்ள தொகுதி மறுசீரமைப்பு முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு செய்யப்படும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் இப்போதே வந்துவிட்டது... மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை, தொகுதிகள் பிரிக்கப்படுவதால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவை தொகுதிகள் குறையும் எனத் தெரிகிறது.... இதனால், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பிரதமாராவதற்கும், கேபினெட் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்... இதனால் மாநிலங்களுக்கு இடையே சமத்துவமற்ற நிலை உருவாகும், இதைத் தவிர்க்க மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினர் எண்ணிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றத் தாழ்வற்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும்... தொகுதி மறுசீரமைப்பில் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாமல் பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை இந்தியா கூட்டணி அளிக்கவேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது... ( 26.01.2024 அன்று *திருச்சி, சிறுகனூரில்* நடைபெற்ற *வெல்லும் சனநாயகம் மாநாட்டில்* விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் - தலைவர் *எழுச்சித்தமிழர்* அண்ணன் *தொல்.திருமாவளவன்* அவர்களால் வாசிக்கப்பட்டு மாநாட்டில் பங்கேற்றவர்களால் நிறைவேற்றப்பட்ட *12 ஆவது தீர்மானம்*)
👍 🙏 5

Comments