Vck Social Media
February 26, 2025 at 03:18 AM
21.09.2017 அன்று சென்னை ராயப்பேட்டை *ஒய்.எம்.சி .ஏ* மைதானத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் *மாநில சுயாட்சி* மாநாட்டில்...
மாநாட்டில் 14 வது தீர்மானமாக...
*இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது...*
தீர்மானம் பின்வருமாறு...👇
1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 நாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது...
இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது தீக்குளித்து தமது இன்னுயிரை ஈகம் செய்த மொழிப் போர்த்தியாகிகளைக் கொண்ட பெருமைக்குரிய மாநிலம் தமிழ்நாடு, எனினும் தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் மீண்டும் இந்திய திணிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது...
தற்பொழுது இந்தியைப் பயிற்று மொழியாக "நவோதயா" பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க வேண்டும் என்கிற ஒரு நெருக்கடியை மதுரை உயர் நீதிமன்றத்தின் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கின் மூலமாக உருவாக்கியிருக்கிறார்கள்..
இவ்வாறு தமிழ்நாட்டின் மீதும் இந்தி பேசாத பிற மாநில மக்களின் மீதும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இந்திய அளவில் மிக மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என இம் மாநாடு எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறது...
இந்த நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டும் அதுவரை ஆங்கிலமே அலுவல் அல்லது இணைப்பு மொழியாக நீடிக்க வேண்டும் .உச்ச நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகவும் ஆங்கிலமே இருக்க வேண்டும்...
உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியை அந்தந்த மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட வேண்டும் .மாநில அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியே இருக்க வேண்டும்...
மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசு பணியாளர்கள் அந்தந்த மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...
எனவே இந்தியை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்ட பிரிவு 343 ம் இந்தி மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு பாடுபட வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்டப்பிரிவு 351 நீக்கப்பட வேண்டும் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும்...
அதற்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது...
எனவே இம்மாநாட்டில் *14வது* தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு இந்த மாநாடு *மாபெரும் வெற்றி அடைந்தது* என்பது குறிப்பிடத்தக்கது...
👍
3