
#𝚃𝙷𝙴𝙿𝙰𝚁𝚅𝟹𝟸𝙽𝙽𝙸𝚂𝙷𝙰
February 10, 2025 at 01:14 PM
செங்கோட்டையன் Vs எடப்பாடி பழனிசாமி!
செங்கோட்டையன் வெளிப்படையாக எடப்பாடியுடன் மோதுவது பெரிதும் ஆர்வமூட்டக்கூடிய செய்தி.
இயல்பில் செங்கோட்டையன் பலவீனமானவர். அதாவது சுலபத்தில் பந்தயத்திலிருந்து விலகிக் கொள்ள கூடியவர். ஓ பன்னீர்செல்வம் முதல்வரான போது கூட அவர் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. அதைவிட முக்கியம் தன் பலவீனத்தை ஏற்றுக் கொண்டு எல்லோருடனும் அமைதியாக வேலை பார்த்தவர்.
ஆனால் எதிர்ப்பக்கம் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தனது இருப்புக்காக யார் ஒருவரையும் அரசியல் ரீதியாக காலி செய்யத் தயங்காதவர். ஓபிஎஸ், டிடிவி இருவரையும் சேர்த்துக் கொள்ள பாஜக கொடுத்த கடும் அழுத்தத்தை நிராகரித்தார். அதற்கான எந்த விலைக்கும் அவர் தயாராக இருந்தார். சசிகலாவுக்கு எத்தனை தூரம் பணிவு காட்டினாரோ அதற்கு இணையான தீவிரத்தோடு அலட்சியம் காட்டியவர்.
சொந்தக் கட்சி அரசியல் எதிரிகளை அரசியல் ரீதியாக ஒழிப்பதில் தயக்கம் காட்டாத எடப்பாடியோடு சரணாகதியையே அரசியல் உத்தியாக வைத்திருக்கும் செங்கோட்டையன் சண்டைக்குத் தயார் என சிக்னல் கொடுக்கிறார் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கருத வேண்டும்.
செங்கோட்டையன் இப்படி பேசும் அளவுக்கு எடப்பாடி என்ன செய்தார் அல்லது எடப்பாடியோடு மோதும் அளவுக்கு செங்கோட்டையனுக்கு சப்போர்ட் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான் இதில் தீர்க்கப்பட வேண்டிய புதிர். பிப்ரவரி 9 ஆம் தேதி நாமக்கல்லில் செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்த பிரமுகர் யார் என்று தெரிந்தால் புதிர் அவிழக் கூடும்…ஆக, அதிமுகவுடன் சீட் பேரத்தைத் தொடங்கிவிட்டது டெல்லி!