North Chennai North( East) District
North Chennai North( East) District
February 15, 2025 at 04:54 PM
கழிப்பறை என்பது மனிதனின் அன்றாட வாழ்வில் முக்கியமான ஒன்று வடசென்னை வியாசர்பாடியில் உள்ள வார்டு 46 காந்திபுரத்தில் 1000 பேர் மேல் வசித்து வருகின்றனர் கதவு இல்லாத கழிவறைகள் தான் பயன்படுத்தி வருகின்றனர். பெண்கள் கழிவறையில் கூட கதவுகள் இல்லாதது தான் என் மனதை மிகவும் கனம் ஆக்கியது எவ்வளவு இன்னளில் அவர்களின் நாட்கள் நகர்கிறது. ஆயிரம் நபர்களுக்கு 6 கழிவறை என்பது எவ்வளவு அநியாயம் அதிலும் ஒரு கழிவறையை பயன்படுத்த முடியாத நிலையில் வைத்து உள்ளனர். இங்கு வசிக்கும் பெண்கள் இரவு நேரத்தில் அதிகாலையில் காலை கடனை கழிக்க ரெயில்வே டிராக் நோக்கி தான் செல்கின்றனர். வடசென்னைக்கு வளர்ச்சிக்கு 1000 கோடி மேல் ஒதுக்கீடு செய்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் கதவுகள் இல்லாத கழிப்பறை தான் அதற்கு அடையாளமாக வடசென்னையில் நிற்கிறது. பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் MLA அவர்கள் இதனை கவனத்தில் கொண்டு மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். #வடசென்னை #கொடுங்கையூர் #வியாசர்பாடி #northmadras

Comments