
BIBLEVOICE77
February 4, 2025 at 01:36 AM
*நிதானித்துப் பாருங்கள்*
(அப்போஸ்தலர் 4:19)
அப்போஸ்தலமாகிய பேதுரு மற்றும் யோவான் இடத்தில் அங்கு சுற்றி இருக்கும் ஆசாரியன்,தேவாலய சேனைத்தலைவன்,சதுசேயர் மத்தியில் பேசுகிற வார்த்தைகள்.
காரணம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்த அற்புதம் போல் பேதுரு மற்றும் யோவான் இடத்தில் பல அற்புதங்கள் நடைபெறுகிறது, வியாதியஸ்தர்கள் சுகமாகிறார்கள்.
ஆண்டவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எருசலேம் உள்ள மக்களுக்கு சுவிசேஷமாக அறிவிக்கிறார்கள் அங்கு இருக்கும் நபர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாமத்தை பற்றி உபதேசங்கள் பிடிக்கவில்லை.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு எருசலேம் மற்றும் உலகத்தை சுற்றி இருக்கிற மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கட்டளையாக கொடுத்தார்.
இதன் நிறைவேறுதலாக ஆண்டவரை இயேசு கிறிஸ்து சுவிசேஷம் பிரசிங்கவும் அனேக மக்கள் இரட்சிக்கப்பட்டு அவரை விசுவாசித்து ஞானஸ்தானம் பெற்றார்கள்.
இது பிரதானமான கட்டளையாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு உரைத்தது ஆனால் அங்கு இருக்கும் மக்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்ககூடாது என்பதை வற்புறுத்தினார்கள்.
ஆனால் பேதுருவும் யோவானும் தேவனுக்கு கீழ்படிவது பிரதானமாக கட்டளையாக பின்பற்றினார்கள் என்பதை நிதானித்து பாருங்கள் என்பதை அங்கு இருக்கும் நபர்களுக்கு முன்பாக சாட்சியிடுகிறார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நம்முடைய வாழ்வில் பல காரியங்கள் இருக்கலாம் ஆனால் அது தேவனுக்கு உகந்தையாக இருக்கிறதா? அவர் கட்டளைக்கு உட்பட்டு இருக்கிறோமா? என்பதை நம்மை நாம் நிதானித்து பார்ப்போம்.
ஆமென்
❤️
1