BIBLEVOICE77
BIBLEVOICE77
February 5, 2025 at 01:35 AM
*உங்களால்கூடாது* *தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது. தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.* (அப்போஸ்தலர் 5:39) எருசலேம் முழுவதும் அப்போஸ்தலர் மூலமாக பல நபர்களுக்கு அற்புதங்கள் மூலமாக அனேக நபர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக இரட்சிக்கப்படுகிறார்கள். இதனால் அங்கு இருந்த பிரதான ஆசாரியர்கள்,பரிசெயர்கள், சதுசேயர்கள் எல்லோரும் கலக்கமடைந்தார்கள். இதனால் அப்போஸ்தலர்களை கொலை செய்ய வேண்டும் என்று வகை தேடினார்கள். ஆனால் அங்கு இருந்த பிரதான நியாயசாஸ்திரியான கமாலியேல் கணிப்பு என்பது தேவனுக்குரியதாக இருந்தது. காரணம் அந்த காலகட்டத்தில் அநேக நபர்கள் எழும்பினார்கள், பெரும்பாரியான ஜனங்களை சேர்த்துக்கொண்டு சீஷர்களாக மாறி இந்த அமைப்புகள் இருந்தன. அந்த அமைப்பின் முதன்மை நபர்  இறந்த பின்பு அந்தக் கூடுகை மொத்தமாக கலைக்கப்பட்டது. தெயுதாஸ்,யுதாஸ் இந்த இரு நபர் மேற்கோள் காட்டி கமாலியேல் பேசுகிறார். அதுபோன்று இந்த கூடுகை தேவனுக்கு சித்தமானால் பெருகும் என்றும் இதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதை உரைக்கிறார். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவனுக்கென்று செயல்படுகிற அனைத்து நபர்களும் வாழ்க்கையும் இது நம்முடைய சூழ்நிலை நமக்கு எதிராக இருந்தாலும்,மனிதர்கள் தந்திரமாக யோசித்து நம்மளை தகர்க்க முற்பட்டாலும் காரியத்தை நடப்பவர் கர்த்தர். ஆமென்

Comments