BIBLEVOICE77
February 7, 2025 at 01:33 AM
*கல்லெறிந்தார்கள்*
*அப்பொழுது; கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.*
(அப்போஸ்தலர் 7:59)
இந்த அதிகாரத்தில் ஆபிரகாம் முதல் இஸ்ரேல் ஜனங்கள் வரை பற்றிய குறிப்புகளை ஸ்தேவான் எடுத்துரைக்கிறார்.
இதன் வாயிலாக ஆண்டவராக இயேசு கிறிஸ்து உலகத்தை மீட்க வந்த மீட்பர் என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
காரணம் இஸ்ரேல் ஜனங்களை தேவன் தேர்ந்தெடுப்பதற்கு என்று முக்கியமான நோக்கம் மேசியா இவ்வுலகத்திற்கு வரவேண்டும்.
இந்த அதிகாரத்தை படிப்பது மூலமாக பழைய ஏற்பாட்டுக் களத்தில் தேவன் எப்படி தேர்ந்தெடுத்து கொண்டார் என்பதை நம் சுருக்கமாக காண முடிகிறது.
அதேபோன்று அன்றைய காலத்தில் பிரதான ஆசாரியகர்,பரிசேயர்கள்,
சதுசேயர்களுக்கு சத்தியத்தை எடுத்துக்கூறுகிறார்.
ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை மாறாக ஸ்தேவனை கல்லறிய வேண்டும் என்று அவனை வெளிலாக கொண்டு வந்து கல்லெறிந்து கொன்றார்கள்.
இவராக ஸ்தேவான் பிரசங்கிக்கிற பொழுது அவர் முகம் தேவ தூதர்களை போலவும், வானம் திறக்கிறதையும் தேவனிடத்தில் ஆண்டவரை இயேசு கிறிஸ்துவின் காண்கிறேன் என்று சொல்கிறார்.
ஆனால் நம்முடைய பார்வை ஸ்தேவான் கொலை செய்யப்பட்டார்.
அங்கிருக்கும் மக்களும் சத்தியத்தை வெளிப்படுத்திய ஸ்தேவானின் வார்த்தையை அவர்கள் ஏற்கவில்லை.
தன்மேல் விழுந்த கடமையை ஸ்தேவான் சரியாக செய்து முடித்தார்.
அதுபோல நம் ஆண்டவரை இயேசு கிறிஸ்துவுக்கு செய்ய வேண்டிய கடமையை வைத்திருக்கிறார்.
அதை நேர்த்தியாக செய்து முடிப்போம்.
ஆமென்
❤️
1