
BIBLEVOICE77
February 12, 2025 at 12:57 AM
*கிறிஸ்தவர்கள்*
*அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.*
(அப்போஸ்தலர் 11:26)
இன்று நம் படிக்கிற வசனத்தின் மூலமாக கிறிஸ்தவர் என்ற பெயர் எந்த இடத்தில் இருந்து உபயோகப்படுத்தப்பட்டது என்பதை நம் காணமுடிகிறது.
அது அந்தியோகியாவில் உள்ள சீஷர்களை பார்த்து இந்த பெயர் சூட்டப்பட்டது.
காரணம் அவர்கள் அனுதினும் சபையில் தேவனுடைய வசனங்களை போதித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த போதனைகள் மக்களிடத்தில் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த மனமாற்றம் கிறிஸ்துவை உடையவர்களாக அவர்களை மாற்றியது.
இவர்கள் வெறுமனே தன்னுடைய மதத்தின் பெயர் அடையாளமாக கிறிஸ்தவர் என்று வைக்காமல் மாறாக கிறிஸ்துவை சொந்த இரட்சகராக இருதயத்தில் ஏற்றுக்கொண்டு மனமாற்றத்தினை ஏற்படுத்தினார்கள் அவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயரிடப்பட்டது.
நாம் வெறுமனே மதத்தின் அடிப்படையிலாக நம் பெயரை வைத்துக் கொண்டால் கிறிஸ்துவின் அன்பு நம்மிடத்தில் வெளிப்படாது.
மாறாக ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்குள்ளாக மனமாற்றத்தினை நம் வெளிப்படுத்த வேண்டும்.
அந்த மாற்றம் நம் சுற்றி இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வகையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆமென்
❤️
1