
BIBLEVOICE77
February 13, 2025 at 01:56 AM
*மெய்யாய்*
*பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது; ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.*
(அப்போஸ்தலர் 12:11)
அப்போஸ்தலராகிய பேதுருவை ஏரோது ராஜா சிறையில் அடைத்திருக்கிறார் காரணம் யூதர்களை பிரியப்படுத்தும் வகையில் அப்போஸ்தலர்களை கொலை செய்வதற்கு.
இந்த நிகழ்வுக்கு முன்பாக யாக்கோபை கொலை செய்தான் ஏரோது ராஜா.
பேதுருவை பஸ்கா பண்டிகளுக்கு முடிந்த பின்பு ஜனங்கள் மத்தியில் கொல்வதற்கு என்று சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்தார்.
இந்த உலகத்தில் என்றும் நடைபெறாத பெரிய அதிசயம் இங்கு நடைபெறுகிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய தூதனை கொண்டு பேதுருவை காப்பாற்றுகிறார்.
பேதுருவுக்கு இந்த காரியம் சொப்பனத்தில் நடைபெறுவது போன்ற இருந்தது ஆனால் மெய்யாகவே தேவ தூதனான் நடத்தப்பட்டார் அப்போஸ்தலாகிய பேதுரு.
இதனை அறிந்த பேதுரு தேவனை மகிமைப்படுத்தினார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே தேவன் தன்னுடைய சித்தத்தின் படி செயல்படுபவர்களுக்கு தேவன் பக்கபலமாக இருந்து எந்த சூழ்நிலை நமக்கு எதிராக இருந்தாலும் கிறிஸ்துவுக்குள்ளாக நம்மை நிறைவாக மாற்றி அந்த சூழ்நிலையில் இருந்து நம்மை காப்பாற்ற வல்லவராயிருக்கிறார்.
அது உலக மக்களுக்கு கற்பனைக்கு எட்ட முடியாத காரியங்களாக இருக்கும்.
ஆனால் தேவனால் பயன்படுத்தப்படுபவர்களுக்கு அது மெய்யாகவே அமையும்.
ஆமென்
❤️
1