
BIBLEVOICE77
February 14, 2025 at 02:03 AM
*கேளுங்கள்*
*அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிறசகல ஜனங்களே கேளுங்கள்.*
(அப்போஸ்தலர் 13:16)
அந்தியோகியா பட்டணத்தில் உள்ள சபை மக்கள் இணைந்து கர்த்தரை ஆராதனை உபவாசித்து பரிசுத்த ஆவியானவரால் ஊழியத்திற்கு என்று பிரித்தெடுக்கப்படுகிறார்கள். பவுலும்,பர்னபாவும் சேர்ந்து தங்களுடைய ஊழியத்தை தொடங்குகிறார்கள்.
பவுல்,பர்னபாவும் கொண்டு தேவன் அனேக காரியங்களை செய்கிறார்.
இதில் விசேஷமாக யூதர்களுக்கு வசனம் பிரசிங்கிக்கப்படுகிறது.
இந்த பிரசங்கத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த மக்களுடன் தொடர்புப்படுத்தி காட்டுகிறார்.
இதன் மூலமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மேசியா என்பதை தாவீது எழுதிய சங்கீதம் வழியாகவும் மேற்கோள்காட்டி பேசுகிறார்.
ஆனால் அங்கிருந்த யூதர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவில்லை.
பவுலையும்,பர்னபாவையும் துன்பப்படுத்தி தேசத்துக்கு எல்லைக்கு துரத்திவிட்டார்கள்.
ஆனால் பவுலும் பர்னபவம் தனக்கு கொடுக்கப்பட்ட சுவிசேஷ பணியை தங்களுக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் புறக்கணித்தாலும் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொன்னார்கள்.
பவுலின் பிரசங்கம் தேவனுக்கு பயப்படும் இஸ்ரவேல் மக்களே கேளுங்கள் என்று மாறாக பக்தியுள்ள யூதா மக்கள் பவுலை தேசத்தை விட்டு துரத்தினார்கள்.
இதன் பின்பாக பவுலும்,பர்னபாவும் காரணமாகவும் புறதேச மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதற்குச் சென்றார்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இன்றைய காலத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தை மெய்யாக போதித்தால் சொந்த மக்களால் நம் பகைக்கப்படுவோம்.
காரணம் அவர்களுக்கு தேவன் மேல் இருக்கும் பயம் இல்லை.
நம் தேவனுக்கு பயப்படாமல் இருப்பது வாழ்க்கை அர்த்தமற்று என்பதை நம் உணர்ந்து தேவனுக்கு பயந்து அனுதினம் செயல்படுவோம்.
ஆமென்
❤️
1