BIBLEVOICE77
February 19, 2025 at 03:00 AM
*இரட்சிக்கப்படுவீர்கள்*
*அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,*
(அப்போஸ்தலர் 16:31)
இந்த உலகத்தில் நம் வாழ்வதற்கும், காப்பாற்றப்படுவதற்கு முதன்மையானது கிறிஸ்தவம் அல்லாத மக்களால் சொல்வது பணம்,சொத்து தங்களை மதிப்புக்குரியவராக மாற்றும் பொருட்கள் மீது மதிப்பு வைப்பார்கள்.
அது நம்மை எந்த வகையிலும் நம்மை இரட்சிக்காது.
நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு எடுத்துக் கொள்ளப்படும் பொழுது அது எதுவும் நம் கூடவும் வராது.
ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலமாக மக்களுக்கு இரட்சிப்பு அளிக்கப்படுகிறது.
இந்த இரட்சிப்பு மனிதர்களை பாவத்திலிருந்து தேவனுக்குள்ளாக திருப்புகிறது.
நம் தேவனுக்குள்ளாக திருப்பப்படும் பொழுது உலகம் தரக்கூடாத சமாதானத்தை தேவன் நமக்கு தந்தருளிகிறார் அதுதான் மீட்பு.
இந்த மீட்பின் சுவிசேஷத்தை அன்றைய கால அப்போஸ்தலர் முதல் இன்றைய கால கிறிஸ்தவர்களுக்கு பிரசிங்கிக்கப்படுகிறது.
காரணம் மனிதராகிய நாம் பாவத்தில் விழுந்து கொண்டிருக்கிறோம்.
இந்த பாவத்தின் வீழ்ச்சியே நம் ஆண்டவரை இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைக்கிறது.
ஒரு மனிதனின் இரட்சிப்பு தன் ஒட்டுமொத்த வீட்டையும் காக்கிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமாக அமைகிறது.
ஆமென்
❤️
1