
BIBLEVOICE77
February 20, 2025 at 02:50 AM
*இங்கேயும்*
*அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு வந்து; உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.*
(அப்போஸ்தலர் 17:6)
பவுலின் பிரசங்கத்தால் அநேக ஜனங்கள் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
அதில் பிரதானமாக யூதர்கள் கிரேக்கர்கள் மற்றும் புறஜாதி மக்கள் என அனைத்து நபர்களும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
பவுலின் ஊழியத்தை கொண்டு தேவன் அநேக மக்களை இரட்சிப்பதற்கு என்று பயன்படுத்தினார் என்பது நமக்கு சாட்சியாக அமைகிறது.
மாறாக அவரின் சுவிசேஷம் மக்களை தெளிவுப்படுத்துகிறது பழைய ஏற்பாட்டு காலத்தில் வந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து வந்தார் என்பதை ஒவ்வொரு இடத்திலும் தெளிவாக மக்களுக்கு போதித்து சத்தியத்தை உணர்த்துவிக்கிறார்.
அவரின் சுவிசேஷம் மெய்யான தேவனை அறிந்து கொள்வதற்கு என்று மக்களின் மனக்கதவு திறக்கப்பட்டது.
பவுலின் அற்புதங்கள் மட்டும் ஜனங்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டார்கள் மற்றும் அவரின் ஒவ்வொரு செயல்களும் கிறிஸ்துவ பிரதிபலிக்கும் வண்ணமாகவும் இருந்தது.
முன்பு சவுலாக இருந்த பொழுது கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தினார் பின்பு இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை சுவிசேஷம் அறிவித்தார் இந்த செய்தி கிறிஸ்தவ மக்களுக்கு மற்றும் புறஜாதி மக்களுக்கும் சாட்சியாக அமைகிறது.
கிறிஸ்துவின் சுவிசேஷம் உலக மக்களில் தவறான எண்ணத்தை மாற்றியது மற்றும் சுவிசேஷத்தை அறிவித்தவர் நபர் உலகத்தை கலக்கும் நபராக மாறிப்போனார்கள் .
ஆமென்
❤️
1