Kodi Dharma - Promoting Peace & Harmony
Kodi Dharma - Promoting Peace & Harmony
February 3, 2025 at 05:19 PM
04-02-2025 (Tuesday) - Ratha Saptami | குரோதி, தை 22 - ரத ஸப்தமி சூரியன் தனது தேரை தெற்கிலிருந்து வட திசையை நோக்கி  திருப்புவதால் ரத ஸப்தமி என்று பெயர். காலையில் 7-எருக்க  இலைகள்,பச்சரிசி, அருகம்புல், மஞ்சள் பொடி, பசுஞ்சாணி ஆகியவற்றை தலையில் வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கி கீழ் கண்ட மந்திரம் சொல்லிஸ்நானம் செய்வதால் ஏழு பிறவிகளில் செய்த பாபம்  அகலும். ரத ஸப்தமி ஸ்நான- அர்க்ய மந்த்ரம் ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே ஸப்த ஜன்மார்ஜிதாம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு தன்மே ரோகம் சோகம்ச மாகரி ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி  தேவித்வாம் ஸப்தலோகைகமாதரம் ஸப்த  அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய. மடி வஸ்த்ரம் உடுத்தி, நெற்றிக்கு  இட்டு கொண்டு, ஸங்கல்பம் செய்து கொண்டு - "ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே". என்று சொல்லி கீழ் கண்ட மந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்கியம் விட வேண்டும். ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக திவாகர  க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே திவாகராய நம: இதமர்க்கியம்  இதமர்க்கியம்,இதமர்க்கியம். www.kodidharma.org

Comments