
Udhayanidhi Team
February 24, 2025 at 01:27 PM
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நம்முடைய #chepauktriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்பு ரூ.94 லட்சம் செலவில் கட்டப்பட்டது. அதனை அண்மையில் நாம் திறந்து வைத்தோம்.
முதற்கட்டமாக அக்கோயிலில் பணியாற்றும் 9 பேருக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை இன்று வழங்கினோம். புதிய இல்லத்தில் குடியேறுவோர் வாழ்வில் புதுமைகள் மலர வாழ்த்தி மகிழ்ந்தோம்.
👍
🙏
2