Kani Maths (www.KaniMaths.com)
February 21, 2025 at 01:18 AM
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் .... Today's (21.02.2025).... School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம. : துறவு
குறள் 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
விளக்கம்:
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
பொன்மொழி :
1) ஒரு மனிதன் தனக்கு ஏற்கனவே தெரியும் என்று நினைப்பதைக் கற்றுக்கொள்வது சாத்தியமற்றது
2) கல்வியின் உயர்ந்த நோக்கம் அறிவு அல்ல செயல்.
பழமொழி :
Failures are stepping stones success
தோல்வியே வெற்றிக்கு முதல்படி
பொது அறிவு :
இந்திய திட்டவியலின் தந்தை யார் ?
விடை : விஸ்வேஸ்வரய்யா
முக்கியச் செய்திகள் :
மாநிலச்செய்தி:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத் தலைவராக எழுத்தாளர் இமயம் நியமனம்
உள்நாட்டுச்செய்தி:
பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ரேகா குப்தா..!!
உலகச்செய்தி:
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை திறக்கும் எலான் மஸ்க்.. அமெரிக்காவிற்கு அநீதியாக இருக்கும்: டிரம்ப் அதிருப்தி!!
விளையாட்டுச்செய்தி:
சாம்பியன்ஸ் டிராபி கிரிகெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.