
Kani Maths (www.KaniMaths.com)
February 25, 2025 at 04:21 AM
Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 25.02.2025 School Morning Prayer Activities
திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/மெய்யுணர்தல்
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
விளக்கம்:
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
பொன்மொழி :
1) கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை
2) கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதை உபயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது
பழமொழி :
Familiarity breeds contempt
பழக பழக பாலும் புளிக்கும்
பொது அறிவு :
இந்தியப் பத்திரிக்கையின் தந்தை யார் ?
விடை : ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
முக்கியச் செய்திகள்
மாநிலச்செய்தி:
பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு
உள்நாட்டுச்செய்தி:
இந்தி மொழிபெயர்ப்பால் தமிழுக்கு பெருமை: வட மாநிலத்தவரை கவரும் சிஐசிடி அரங்கு
உலகச்செய்தி:
உலகிற்கே முன்னோடியான தமிழ்நாடு.. இங்கிலாந்து பள்ளிகளிலும் அறிமுகமாகும் காலை உணவுத் திட்டம்!
விளையாட்டுச்செய்தி:
மகா ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சென்னையை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் இணை அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றது.